தன்னை வேட்பாளராக முன்நிறுத்தி காங்கிரஸ் ஜோதிமணி அரவக்குறிச்சியில் பிரச்சாரம்

By செய்திப்பிரிவு

கரூர் மாவட்டம் தென்னிலை அருகே உள்ள திருமங்கலத்தைச் சேர்ந்தவர் ஜோதிமணி (40). எம்.ஏ. எம்.ஃபில் பட்டதாரி. காங் கிரஸ் கட்சியின் செய்தி தொடர் பாளர். 2 முறை க.பரமத்தி ஒன்றியக் குழு கவுன்சிலராக இருந்தவர்.

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ‘நமது வேட்பாளரை நாமே தேர்ந் தெடுக்க வேண்டும்’ என்பதன் அடிப்படையில் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் மக்களை சந்தித்து பிரச்சாரம் நடத்தி வருகிறார்.

இதற்கிடையே காங்கிரஸ்- திமுக கூட்டணி உருவான நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ‘ஜோதிமணி எலெக்ஷன் கேம்பைன்’ என்ற வாட்ஸ் அப் குரூப்பை தொடங்கி உள்ளார். தொடர்ந்து அத்தொகுதியில் பிரச் சாரம் செய்து வருகிறார். தொகுதி உடன்பாடு எட்டப்படாத நிலையில் ஜோதிமணியின் இந்த பிரச்சாரம் திமுகவினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

இதுகுறித்து ஜோதிமணி கூறிய தாவது: டெல்லியில் இருந்து கொண்டு தமிழகத்தில் வேட் பாளரை முடிவு செய்வதைவிட அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் வேட்பாளரை தேர்வு செய்வது தான் சரியாக இருக்கும் என ராகுல் நினைக்கிறார். அதனடிப் படையில் சோதனை முயற்சியாக கடந்தாண்டு ஜூலையில் இதற் கான திட்டத்தை வடிவமைத்து செயல்படுத்தி வருகிறோம்.

அரவக்குறிச்சி என் சொந்த தொகுதி என்பதாலும் நமது வேட் பாளரை நாமே தேர்வு செய்ய வேண்டும் என மக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சினை களை கேட்டு வருகிறேன். ‘என்னை ஒரு தகுதியான வேட்பாளராக கருதினால் மிஸ்டுகால் அளிக்கும் படி’ 5 ஆயிரம் துண்டு பிரசுரம் விநியோகித்தோம். இதன் பேரில் 998 மிஸ்டு கால் வந்துள்ளது. நான் இந்தப் பணியை தொடங்கியபோது காங் கிரஸ்- திமுக கூட்டணி ஏற்பட வில்லை. கட்சிக்கு தெரியாமல் எந்த நடவடிக்கையிலும் நான் ஈடுபடவில்லை என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

வணிகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இணைப்பிதழ்கள்

11 hours ago

க்ரைம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்