நான் தனியாகத்தான் நிற்கிறேன்: ரிஷிவந்தியத்தில் விஜயகாந்த் ருசிகரம்

By செய்திப்பிரிவு

ஜெயலலிதா மீண்டும் முதல்வ ராக முடியாது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள் ளார்.

விழுப்புரம் மாவட்டம் திருக் கோவிலூர் மற்றும் ரிஷிவந்தியம் எம்எல்ஏக்களின் தொகுதி மேம் பாட்டு நிதியில் இருந்து ரூ.1.77 கோடி மதிப்பீட்டிலான பணிகள் தொடக்க விழா மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நேற்று திருக் கோவிலூர் பேருந்து நிலைய வளா கத்தில் நடைபெற்றது. இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலத்திட்ட உதவிகளையும் வழங்கி னார். பின்னர், அவர் பேசியதாவது:

ரிஷிவந்தியம் தொகுதியில் என்னால் முடிந்தவரை பணிகளை செய்து முடித்துள்ளேன். அதிலும், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு நையா பைசாக்கூட எடுக்காமல் பணிகளை செய்து முடித்துள்ளேன். சட்டபேரவை யில் இருந்து தேமுதிக உறுப்பி னர்கள் 6 பேர் இடைநீக்கம் செய் யப்பட்டார்கள். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இந்த இடைநீக்கம் தள்ளுபடி செய்யப் பட்டது. அதன்பின் அவர்கள் பேரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

எனவே, வரும் தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வராமல் இருப்பதற்கு என்னென்ன செய்ய முடியுமோ, அவை அனைத் தையும் நான் செய்வேன். அந்த வகையில் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது. நாடாளு மன்றத்தை அதிமுக எம்பிக்கள் இன்று முடக்கினார்கள். அதற்கு மக்களவையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால், தமிழக சட்டப்பேர வையை நாங்கள் முடக்கினால் மட்டும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தமிழகத்தில் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டபோது ஏற்பட்ட அனுதாபத்தால் அன் றைக்கு அதிமுக ஆட்சிக்கு வந்தது. ஜெயலலிதா முதல்வரானார். அதுபோல இன்று ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய கைதிகளை விடுதலை செய்தால் மீண்டும் ஆட்சிக்கு வந்து விட லாம் என ஜெயலலிதா கனவு காண் கிறார். அது ஒருபோதும் பலிக் காது.

தமிழகத்தில் மழையால் பாதிக் கப்பட்ட மக்களுக்கு ரூ.5 ஆயிரம் வெள்ள நிவாரணமும், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் மழை யால் பாதிக்கப்பட்ட விவசாயிக ளுக்கு ரூ.18 ஆயிரம் நிவாரணத் தொகையும் இதுவரை முழுமை யாக வழங்கப்படவில்லை. ஆனால், வெள்ள நிவாரண நிதியை அனைவருக்கும் கொடுத் ததாக ஜெயலலிதா கூறுகிறார். இதற்கிடையே, தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.1000 கோடியை நாங்கள் வழங்கினோம் என்றும் ஜெயலலிதா பெருமை தேடிக்கொள்வதாகவும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

கூட்டணி வைப்பதற்கு விஜய காந்த் பயப்படுகிறார் என்று சொல்கிறார்கள். நான் பயப்பட வில்லை. நான் சொல்வதுதான் வேதவாக்கே தவிர, மற்றவர்கள் சொல்வது கிடையாது. பணத் துக்கும், புகழுக்கும் ஆசைப்படு பவன் நான் இல்லை. அந்த வகையில் தேர்தலில் நான் தனி யாகத்தான் நிற்கிறேன். யாரு டனும் இல்லை. எதை செய் தாலும் தொண்டர்களையும், பத் திரிகையாளர்களையும் அழைத்து உண்மையைச் சொல்வேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

இந்தியா

39 mins ago

இந்தியா

53 mins ago

இந்தியா

1 hour ago

வலைஞர் பக்கம்

11 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்