கல்லூரி நிறைவு நாளுக்காக புதுச்சட்டை வாங்கச் சென்றபோது சங்கருக்கு நேர்ந்த சோகம்

By செய்திப்பிரிவு

உடுமலையில், கலப்புத் திருமணம் செய்துகொண்ட பொறியியல் கல் லூரி மாணவர் கொலை செய்யப் பட்டதைக் கண்டித்து அவரது சட லத்தை வாங்க மறுத்து, கோவை அரசு மருத்துவமனையில் மாணவ ரின் உறவினர்கள் மற்றும் தலித் அமைப்புகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொலை செய்யப்பட்ட சங்கரின் உடல் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரே தப் பரிசோதனை செய்யப்பட்டது. கொலையில் தொடர்புடைய அனை வரையும் கைது செய்யும் வரை சடலத்தை பெறப் போவது இல்லை என தெரிவித்து உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, திருச்சி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீ ஸார் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து சங்கரின் சடலத்தை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். அவரது சடலம் சொந்த ஊரான குமரலிங்கத்துக்கு மாலையில் எடுத்துச் செல்லப்பட்டது.

வாழ்க்கைப் போராட்டம்

கொலை செய்யப்பட்ட சங்க ருக்கு இரு தம்பிகள் உள்ளனர். அவர்களில், விக்னேஷ்குமார், உடுமலை அரசுக் கல்லூரியில் பி.எஸ்சி. பட்டப்படிப்பு படித்து வருகிறார். மற்றொரு தம்பி, அரசுப் பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வருகிறார்.

கோவை அரசு மருத்துவ மனைக்கு வந்திருந்த விக்னேஷ் வரன் கூறும்போது: ‘திருமணம் செய்துகொண்டது முதலே எங்கள் வீட்டுக்கு சிலர், அடிக்கடி வந்து மிரட்டிச் சென்றனர். கடந்த இரு மாதங்களுக்கு முன்னர், அண் ணியை கடத்திச் சென்றனர். அவர்களிடம் இருந்து தப்பி, உடு மலை காவல் நிலையத்தில் தஞ்சமடைந்து மீண்டு வந்தார். இருப்பினும், இருவருக்கும் மிரட் டல் இருந்து வந்தது.

மிகவும் வசதியாக வாழ்ந்தவர் எனது அண்ணி. இருப்பினும், குடும் பச் செலவை சமாளிப்பதற்காக டைல்ஸ் கம்பெனிக்கு மாதம் ரூ. 3,500 சம்பளத்துக்கு வேலைக்குச் சென்றார். அண்ணனுக்கும், இன் னும் ஒரு மாதத்தில் படிப்பு முடிந்துவிடும் என்பதால் அதுவரை சமாளித்துவிடலாம் என்றிருந்தனர். சங்கருக்கு வளாகத் தேர்வு மூலமாக சென்னையில் உள்ள ஆட்டோமொபைல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. தேர்வு முடித்துவிட்டு அங்கு சென்று விடலாம், ஓரளவு பிரச்சினை முடிந்தவுடன் ஊர் திரும்பலாம் என நினைத்திருந்தனர்.

இன்று (நேற்று) அண்ணனுக்கு கல்லூரியின் நிறைவு நாள், அவ ருக்கு புதுச் சட்டை வாங்குவதற்காக அண்ணிதான் ஆசையாக அழைத்துச் சென்றார். ஆனால், இருவருக்கும் இப்படி ஆகும் என நினைக்கவில்லை’ என்றார்.

சங்கரின் தாயார் சில ஆண்டு களுக்கு முன்பே இறந்துவிட்டார். கூலி வேலைக்குச் செல்லும் வேலுச் சாமி, வங்கிக் கடன் உதவியுடன் சங்கரை படிக்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

1 min ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

50 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்