தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை விடுவிக்க முடியாது: இலங்கை அமைச்சர் மகிந்த அமரவீர திட்டவட்டம்

By செய்திப்பிரிவு

இலங்கை கடல் பகுதியில் அத்து மீறி நுழைந்து மீன்பிடித்த தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் விடுவிக்கப்படமாட்டாது என இலங்கை மீன்வளத் துறை அமைச் சர் மகிந்த அமரவீர தெரிவித் துள்ளார்.

இலங்கை கடற்படையினரால் கடந்த ஓராண்டாக சிறைபிடிக்கப் பட்டுள்ள 78 விசைப்படகுகளையும், இலங்கை சிறைகளில் உள்ள 15 தமிழக மீனவர்களையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி நாகை, காரைக்கால், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்ட விசைப்படகு மீனவர்கள் ஜனவரி மாதம் உண்ணாவிரதம், வேலைநிறுத்தம், துறைமுகம் முற்றுகை என தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். தமிழக அரசின் சமரச பேச்சு வார்த்தைக்குப் பின்னர் மீனவர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இலங்கை மட் டக்களப்பில் மீன்கள் இனப் பெருக்கப் பண்ணை தொடக்க விழா நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் மகிந்த அமரவீர செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக மீனவர்கள் மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா, முல் லைத்தீவு உள்ளிட்ட வடமாகாண கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து தடை செய்யப்பட்ட வலைகளைக் கொண்டு மீன் பிடிப்பதால் இலங்கையின் மீன் வளம் அழிக்கப்பட்டு வருகிறது. இலங்கை கடல் பகுதியில் மீன் பிடித்த தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் விடுவிக்கப்பட மாட்டாது.

தமிழக மீனவர்களின் அத்து மீறல்களை இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என கடந்த வாரம் இலங்கை வந்த இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் வலியுறுத்தப்பட் டுள்ளது.

இதுகுறித்து பேசுவதற்கு இந்திய அரசு எனக்கு அழைப்பு விடுத்துள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

48 mins ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

க்ரைம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்