செங்கை தடத்தில் 8 நாட்களுக்கு மின் ரயில் சேவையில் மாற்றம்

By செய்திப்பிரிவு

தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: காட்டாங்குளத்தூர் - கூடுவாஞ்சேரி ரயில் நிலையங்களுக்கு இடையே, வரும் 15, 17, 18, 20, 22, 24, 25, 27-ம் தேதிகளில் காலை 11.25 மணி முதல் மதியம் 1.25 மணி வரையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளன. இதனால், இந்த தடத்தில் மேற்கண்ட நாட்களில் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு காலை 10.56 மணி ரயில், கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும். சென்னை கடற்கரை - செங்கல்பட்டு காலை 10.10 மணி ரயில் (18, 25-ம் தேதிகள் தவிர) கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும். சென்னை கடற்கரை - செங்கல்பட்டு காலை 11.50 மணி ரயில் வரும் 18, 25-ம் தேதிகளில் மட்டும் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும்.

இதேபோல், செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மதியம் 12.20 மணி ரயில் மேற்கண்ட நாட்களில் கூடுவாஞ்சேரியில் இருந்தும், காலை 11.30 மணி ரயில் (18, 25-ம் தேதிகள் தவிர) மற்ற நாட்களில் கூடுவாஞ்சேரியில் இருந்தும் இயக்கப்படும்.

செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மதியம் 1 மணி ரயில் வரும் 18, 25-ம் தேதிகளில் மட்டும் கூடுவாஞ்சேரியில் இருந்து இயக்கப்படும்.

முழு சேவை ரத்து

திருமால்பூர் - சென்னை கடற்கரை காலை 10.40 மணி ரயில் வரும் 15, 17, 20, 22, 24, 27-ம் தேதிகளில் முழு சேவையும் ரத்து செய்யப்படுகிறது.

இதற்கு மாற்றாக, மேற்கண்ட நாட்களில் மதியம் 12 மணிக்கு திருமால்பூர் - சென்னை கடற்கரைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

33 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வலைஞர் பக்கம்

39 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்