65 ஆண்டுகளாக தொடர்ந்து அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் எல்ஐசி

By செய்திப்பிரிவு

எல்ஐசி எனப்படும் இந்திய ஆயுள்காப்பீடு நிறுவனம் 14 நாடுகளில் கால்பதித்த முதன்மையான நிறுவனமாகும் இது இன்று (செப்.1) தனது66-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

1956-ம் ஆண்டு ரூ.5 கோடிமுதலீட்டுடன் தொடங்கப்பட்ட எல்ஐசி நிறுவனம் தற்போது ரூ.38,04,610 கோடி சொத்தும், ரூ.34,3,686 ஆயுள் நிதியையும்கொண்டுள்ளது. பிராண்ட் ஃபைனான்ஸ் இன்சூரன்ஸ் 100 என்ற அமைப்பு வெளியிட்ட கணக்கெடுப்பின்படி உலக அள
வில் எல்ஐசி 3-வது வலுவானநிறுவனமாகவும், 10-வது மிகவும் மதிப்பு வாய்ந்த பிராண்டாகவும் விளங்குகிறது.

இன்சூரன்ஸ் துறையில் தனியாரும் ஈடுபடலாம் என்ற நிலைஏற்பட்டு 20 ஆண்டுகள் ஆகியும், முதல் ஆண்டு பிரீமியம் வரு
மானத்தில் 66.18 சதவீதம், பாலிசிகளின் எண்ணிக்கையில் 74.58 சதவீதம் சந்தை பங்கை பெற்று முதலிடத்தை வகிக்கிறது. 2020-21 ஆண்டில் 2.10 கோடி புதிய பாலிசிகளை விற்று, 3.48 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது.

தற்போது எல்ஐசி நிறுவனம் 8 மண்டல அலுவலகங்கள், 113 பிரிவு அலுவலகங்கள், 74 வாடிக்கையாளர் மண்டலங்கள், 2048
கிளைகள், 13.53 லட்சம் முகவர்களுடன் செயல்பட்டு வருகிறது.

மேலும் 8 பொதுத்துறை வங்கிகள், 6 தனியார் வங்கிகள், 13 பிராந்திய கிராம வங்கிகள், 41 கூட்டுறவு வங்கிகள், ஒரு வெளி
நாட்டு வங்கி ஆகியவற்றுடன் கூட்டு வைத்துள்ளது.

வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளுக்கு ஏற்ப மொத்தம் 32 வெவ்வேறு திட்டங்களை கொண்டுள்ளது. 2020-21-ல் 229.15 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,47,754 கோடியை செட்டில் செய்துள்ளது. அவ்வப்போது வரும் நவீனதொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு சுலபமான வகையில் சேவையாற்றி வருகிறது.

இவ்வாறு எல்ஐசி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்