உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு முதல் அரசு பிளீடர் நியமனம்

By கி.மகாராஜன்

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் முதல் அரசு பிளீடராக வழக்கறிஞர் பி.திலக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, உலகநேரியில் 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கூடுதல் அட்வகேட் ஜெனரல், கூடுதல் அரசு வழக்கறிஞர்கள், சிறப்பு அரசு வழக்கறிஞர்கள், அரசு வழக்கறிஞர்கள் (உரிமையியல்/ குற்றவியல்) என 73 அரசு வழக்கறிஞர் பணியிடங்கள் உள்ளன.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 2 கூடுதல் அட்வகேட் ஜெனரல் பணியிடங்கள் உள்ளன. அரசு பிளீடர் பதவி கடந்த ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டது. எனினும் இப்பதவிக்கு நேரடியாக யாரும் இதுவரை நியமிக்கப்படவில்லை.

இந்நிலையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் முதல் அரசு பிளீடராக பி.திலக்குமாரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவர் அருப்புக்கோட்டை அருகே உள்ள கோவிலாங்குளத்தைச் சேர்ந்தவர். திமுக சட்டப் பாதுகாப்புக் குழுவின் மதுரை மண்டலப் பொறுப்பாளராக உள்ளார். கடந்த திமுக ஆட்சியில் கூடுதல் அரசு வழக்கறிஞராகவும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வழக்கறிஞராகவும் பணிபுரிந்தார்.

தற்போது திமுக ஆட்சி அமைந்ததும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்குத் தற்காலிக அரசு வழக்கறிஞராக திலக்குமார் நியமிக்கப்பட்டார். தற்போது அரசு பிளீடராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து இன்று வாழ்த்து பெற்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தொழில்நுட்பம்

2 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

மேலும்