2 மாதத்தில் 100 சதவீதம் தடுப்பூசி இலக்கு எட்டப்படும்: மதுரை சுகாதாரத்துறை அதிகாரிகள் நம்பிக்கை

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி பற்றாக்குறை தீர்ந்ததால் தினமும் சராசரியாக 17,500 ஆயிரம் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இதே அளவுக்கு தடுப்பூசி போட்டால் 2 மாதத்தில் 100 சதவீதம் தடுப்பூசி போட்டோர் இலக்கு எட்டப்படும் என மதுரை சுகாதாரத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

மதுரை மாவட்டத்தில் இதுவரை 52,548 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் சராசரியாக 15 பேருக்கு புதிதாக தொற்று ஏற்படுகிறது. இந்த தொற்று நோயை முழுமையாக தடுக்க, சுகாதாரத்துறை பொதுமக்களுக்கு தடுப்பூசி போடுவதை ஊக்குவித்துள்ளனர். கடந்த மார்ச் முதல் மே மாதம் வரை தடுப்பூசி போட சுகாதாரத்துறை அழைத்தும் மக்கள் ஆர்வம் காட்டவில்லை. அதன்பிறகு தடுப்பூசி மட்டுமே தற்காப்பு ஆயுதம் என்பது தெரிந்ததும் மக்கள் தடுப்பூசி மையங்களுக்கு படையெடுத்தனர்.

அதிகாலை முதல் மாலை வரை பல கி.மீ., வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டனர். ஆனால், தடுப்பூசி மையங்களில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டதால் தள்ளுமுள்ளு, சாலை மறியல் போராட்டங்கள் கூட மதுரையில் நடந்தது. அதனால், தடுப்பூசி மையங்களில் கூட்டம் குவிவதை தடுக்க, முன்பதிவு முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.

தடுப்பூசிக்கு மிகப்பெரிய பற்றாக்குறை ஏற்பட்டதால் மக்கள் தடுப்பூசி போட முடியாமல் தவித்தனர். கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் தடுப்பூசிகள் பற்றாக்குறை தீர்ந்துள்ளது. அதனால், மதுரை மாவட்டத்தில் தற்போது தினமும் ஒரு நாளைக்கு 17,500 ஆயிரம் பேர் தடுப்பூசி போடுகின்றனர். இதேவேகத்தில் தற்போதைய நிலை நிடித்தால் தடுப்பூசி போட்டால் 2 மாதத்தில் மதுரை மாவட்டத்தில் 100 சதவீதம் தடுப்பூசி போட்டோர் இலக்கை எட்டப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

அவர்கள் கூறுகையில், ‘‘இதுவரை 9,70,866 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். தற்போது ஒரு நாள் விட்டு ஒருநாள் தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்படுகிறது. இதேநிலை நீடித்ததால் நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் 100 சதவீதம் தடுப்பூசி போட்டோர் இலக்கு எட்டப்படும், ’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

க்ரைம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

உலகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

மேலும்