பரதநாட்டியம் ஆடி முகபாவனைகள் மூலம் - கீழடியின் பெருமைகளை விளக்கிய ‘பத்மஸ்ரீ' நர்த்தகி நட்ராஜ்

By செய்திப்பிரிவு

திருப்புவனம் அருகே கீழடியில் பரத நாட்டியம் ஆடி கீழடியின் பெருமையை சுற்றுலா பயணி களுக்கு மாநில வளர்ச்சி கொள் கைக் குழு உறுப்பினர் ‘பத்மஸ்ரீ' நர்த்தகி நட்ராஜ் விளக்கினார்

திருப்புவனம் அருகே கீழடியில் ஏற்கெனவே 6 கட்ட அகழாய்வு முடிந்து 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண் டெடுக்கப்பட்டன. தற்போது கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் 7-ம் கட்ட அகழாய்வுப் பணி நடக்கிறது.

இந்நிலையில் நேற்று மாநில வளர்ச்சி கொள்கைக் குழு உறுப் பினரும், பிரபல பரத நாட்டியக் கலைஞருமான ‘பத்மஸ்ரீ' நர்த்தகி நட்ராஜ் கீழடிக்கு வந்தார். அவர் பார்வையிட்ட பிறகு, கீழடிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் முன்னிலையில் பரத நாட்டியம் ஆடி, முகபாவனைகள் மூலம் கீழடியின் பெருமைகளை அழகாக விளக்கினார். இதை சுற்றுலா பயணிகள் வியந்து பார்த்தனர்.

தொடர்ந்து அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: கீழடி மனிதனின் வரலாற்றையும், நாகரிகத்தையும் மாற்றி எழுதப் போகிறது. இது தமிழனின் பெரு மையை உலகுக்கு எடுத்துக் கூறு கிறது. உலக வரைபடத்தில் கீழடி ஒரு மாற்ற முடியாத இடமாக இருக்கும். நான் தொடர்ந்து அனை த்து கட்ட அகழாய்வு பணிகளையும் பார்வையிட்டு வருகிறேன். இது வரை 20 சதவீத அகழாய்வே நடந் துள்ளது. இன்னும் 80 சதவீதம் கண்டறியப்பட வேண்டி உள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

வணிகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

இணைப்பிதழ்கள்

10 hours ago

க்ரைம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்