வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு: பாமக நிறுவனர் ராமதாஸுக்கு இணையவழியில் பாராட்டு விழா

By செய்திப்பிரிவு

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு பாமக மற்றும் வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் நேற்று இணையவழியில் பாராட்டு விழா நடைபெறுகிறது.

இந்த பாராட்டு விழாவில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு ராமதாஸை வாழ்த்தி பேசினர்.

பாமக ஆட்சி

இக்கூட்டத்தில் பாமக நிர்வாகிகள் பேசும்போது, “வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கொண்டுவர பாமக நிறுவனர் ராமதாஸ் மேற்கொண்ட தொடர் போரட்டங்கள் குறித்து கிராமங்கள் தோறும் பொதுகூட்டம் நடத்த வேண்டும்.

இளைஞர்களிடம் இதுபற்றி எடுத்துக் கூறவேண்டும். அடுத்த தேர்தலில் பாமக ஆட்சியமைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக கருத்தரங்கு நடத்த வேண்டும், கரோனா குறைந்த பிறகு பாமக நிறுவனர் ராமதாஸுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்” என்றனர். மேலும் தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வந்த முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கும், இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்தனர். விழாவின் நிறைவாக டாக்டர் ராமதாஸ் நன்றி தெரிவித்து பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

23 mins ago

கல்வி

37 mins ago

சினிமா

45 mins ago

தமிழகம்

56 mins ago

இந்தியா

49 mins ago

விளையாட்டு

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்