ரயில் நிலையங்களில் முகக்கவசம் விற்பனை: பயணிகள் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

ரயில் நிலையங்கள், ரயில்களில் முகக் கவசம் அணியாத பயணிகளிடம் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

இதற்கு பயணிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ‘‘முகக்கவசம் அணியவில்லை என்று கூறி, பயணிகளிடம் ரூ.500 அபராதம் வசூலிப்பது நியாயம் அல்ல. உண்மையில் பயணிகள் மீதுஅக்கறை இருந்தால், பயணிகளுக்கு இலவசமாக முகக்கசவத்தை ரயில்வே விநியோகம் செய்யலாம். ரயில் நிலையங்களில் முகக்கவசம் விற்பனைக்கு ஏற்பாடு செய்யலாம்’’ என்றனர்.

இதுசம்பந்தமாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பயணிகளிடம் அபராதம் வசூலிப்பது ரயில்வேயின் நோக்கம் அல்ல. வீட்டைவிட்டு வெளியே சென்றாலே முகக்கவசம் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வு பொதுமக்களுக்கு அவசியம். பயணிகளிடம் தொடர்ந்து இதை வலியுறுத்தி வருகிறோம்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

இந்தியா

7 mins ago

இந்தியா

27 mins ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

16 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்