இரு அதிமுக எம்எல்ஏக்களின் வெற்றியை எதிர்த்து வழக்குகள்: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

கிருஷ்ணகிரி, வேதாரண்யம் தொகுதி அதிமுக எம்எல்ஏக்களின் வெற்றியை எதிர்த்து, திமுக வேட்பாளர்கள் தாக்கல் செய்த தேர்தல் வழக்குகளுக்கு பதிலளிக்க, அதிமுக எம்எல்ஏக்களுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அசோக்குமார் 794 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து அத்தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் செங்குட்டுவன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இதேபோல், வேதாரண்யம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு 12 ஆயிரத்து 329 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஓ.எஸ்.மணியனின் வெற்றியை எதிர்த்து, திமுக வேட்பாளர் வேதரத்தினம் தேர்தல் வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுக்களில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அதிகார துஷ்பிரயோகத்திலும், ஊழல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது

இரு தேர்தல் வழக்குகளையும் இன்று (ஜூலை 30) விசாரித்த நீதிபதி பாரதிதாசன், வழக்கு தொடர்பாக செப்டம்பர் 6-ம் தேதிக்குள் பதிலளிக்க இரு அதிமுக எம்எல்ஏக்களுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

22 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்