ஆதரவற்ற இல்ல சிறார்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

By செய்திப்பிரிவு

சென்னை சேத்துப்பட்டில் ஆதரவற்ற இல்லத்தில் தங்கியிருக்கும் சிறார்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் பயிற்சி மைய முதல்வர் எம்.கே.கருப்பையாவின் மூத்த மகள் சூர்யா கடந்த 2013-ம்ஆண்டு மர்ம காய்ச்சலால் திடீரென உயிரிழந்தார். அவரது நினைவாக மருத்துவர் கே.சூர்யா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளை குடும்பத்தினரால் தொடங்கப்பட்டது. அவரது நினைவு நாள் மற்றும் பிறந்த நாளன்று ஆதரவற்ற சிறார்கள் மற்றும் முதியோருக்கு ஆண்டுக்கு இருமுறை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன்ஒருபகுதியாக மருத்துவர் சூர்யாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு, சென்னை சேத்துப்பட்டில் உள்ள ரெயின்போ இல்லத்தில் ஆதரவற்ற சிறார்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ஆண் குழந்தைகள் மற்றும் பெண் குழந்தைகள் என 50-க்கும் மேற்பட்டோருக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன. மேலும், பள்ளிக்கு எடுத்துச் செல்லவசதியாக தண்ணீர் கேன்கள் மற்றும் உணவு வழங்கப்பட்டது. கரோனா பரவல் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் எல்ஐசி பயிற்சி மைய முதல்வர் எம்.கே.கருப்பையா, எல்ஐசி மூத்த அதிகாரி குமரேசன், வளர்ச்சி அதிகாரி ஆறுமுகசாமி, கண்ணன் பாபு, ரெயின்போ ஹோம்ஸ் மாநில திட்ட மேலாளர் சுசீலா, வேல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

1 hour ago

ஆன்மிகம்

24 mins ago

கல்வி

4 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்