தமிழக அரசு சார்பில் நீட் தேர்வு குறித்து தெளிவான அறிவிப்பு வெளியிட வேண்டும்: கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

இந்த ஆண்டு நீட் தேர்வு நடத்தப்படுவது குறித்து தமிழக அரசு தெளிவான அறிப்பை வெளியிட வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் க.கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திமுகஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு கட்டாயமாக நீட் தேர்வு நடத்தப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது. எனவே, திமுக தலைமையிலான தமிழக அரசு, நீட் தேர்வு நடத்துவது குறித்து தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்தை நண்பர் என்ற முறையில் சந்தித்துப் பேசினேன். தமிழகத்தில் தடுப்பூசி இருப்பு குறித்து வெளிப்படைத்தன்மை இல்லை. எனவே, தடுப்பூசி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

திமுக ஆட்சிக்கு வந்தபின்னர் இந்தியாவை ஒன்றியம் என அழைப்பது நம்மை நாமேசிறுமைப்படுத்துவது போல உள்ளது. திமுக தனது நிலைப்பாட்டை மாற்ற வேண்டும். அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயிலுக்குச் சொந்தமான சொத்துகள் தொடர்பாக முழுமையான விவரங்களை வெளியிட வேண்டும்.

கோயிலுக்குச் சொந்தமான ஒரு அடி நிலம் கூட ஆக்கிரமிக்க அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

24 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்