கோவையிலிருந்து தாஜ்மஹாலுக்கு சிறப்பு விமான சுற்றுலா: ஐஆர்சிடிசி சார்பில் முன்பதிவு தொடக்கம்

By க.சக்திவேல்

இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) சார்பில் கோவையில் இருந்து தாஜ்மஹாலுக்கு விமானம் மூலம் சுற்றுலா செல்வதற்காக முன்பதிவு தொடங்கியுள்ளது.

இதுதொடர்பாக ஐஆர்சிடிசி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ரயில் மூலம் மட்டுமல்லாமல் விமானம் மூலமாகவும் பல்வேறு சுற்றுலா திட்டங்களை ஐஆர்சிடிசி செயல்படுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, பாரத தரிசன சிறப்பு ரயில் மூலம் கோவா, சர்தார் படேல் சிலை, ஜெய்ப்பூர், டெல்லி, ஆக்ரா (தாஜ்மஹால்) மற்றும் ஹைதராபாத் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

12 நாட்கள் கொண்ட இந்த சுற்றுலா பயணத்துக்கான ரயில் மதுரையில் இருந்து ஆகஸ்ட் 15-ம் தேதி புறப்படுகிறது. இதற்கு பயணத்துக்கு கட்டணமாக ரூ.12 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, திருப்பதி, காளஹஸ்தி ஆகிய இடங்களுக்கு செல்லும் மூன்று நாட்கள் சுற்றுலா பயணத்துக்கான ரயில் ஆகஸ்ட் 27-ம் தேதி கோவையிலிருந்து புறப்படுகிறது. இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக செல்லும். இந்த சுற்றுலாவுக்கு கட்டணமாக ரூ.6,685 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வரும் செப்டம்பர் 11-ம் தேதி கோவையில் இருந்து விமானம் மூலம் காசி, அலகாபாத், புத்த கயா ஆகிய ஆன்மிக சுற்றுலா தலங்களுக்கு செல்ல ரூ.27,460 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் அக்டோபர் 2-ம் தேதி கோவையில் இருந்து விமானம் முலம் ஜெய்ப்பூர், ஆக்ரா (தாஜ்மஹால்), டெல்லி ஆகிய இடங்களுக்கு சுற்றுலா செல்ல 26,600 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில், விமான கட்டணம், நட்சத்திர ஹோட்டலில் தங்கும் வசதி, ஏசி வாகன போக்குவரத்து, காலை, இரவு உணவு, ஜிஎஸ்டி ஆகியவை அடங்கும். மத்திய, மாநில அரசு ஊழியர்கள் எல்டிசி சலுகைகளைப் பெறலாம். இந்த சுற்றுலா குறித்த கூடுதல் விவரங்கள் முன்பதிவுக்கு ஐஆர்சிடிசி-ன் கோவை அலுவலகத்தை 9003140655, 8287931965 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் அல்லது www.irctctourism.com என்ற இணையதளத்தில் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 mins ago

இந்தியா

36 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சுற்றுலா

2 hours ago

மேலும்