காரைக்காலில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

By வீ.தமிழன்பன்

காரைக்கால் மாவட்டத்தில் 2 நாட்கள் நடைபெறும் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று(ஜூலை 23)தொடங்கியது.

அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்ற நோக்கில், காரைக்கால் மாவட்டத்தில் அவ்வப்போது தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி காரைக்கால் அரசு பொது மருத்துவமனை, திருநள்ளறு சமுதாய நலவழி மையம், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட 15 மையங்களில் 2 நாட்கள் நடைபெறும் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று தொடங்கியது.

இம்முகாமில் 18 முதல் அனைத்து வயதினருக்கும், குறிப்பாக சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இருதய நோய் உள்ளிட்ட இணை நோய் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மேலும் தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்களுக்கு அருகாமையில் உள்ள பகுதிகளில் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடும் பணியிலும் நலவழித்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர்.

மாவட்ட துணை ஆட்சியர் எம்.ஆதர்ஷ், நலவழித்துறை துணை இயக்குநர் டாக்டர் கே.மோகன்ராஜ் ஆகியோர் தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். நாளையும் (ஜூலை 24) தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்