புதுச்சேரியில் புதிதாக 104 பேருக்கு கரோனா: மேலும் 2 பேர் உயிரிழப்பு

By அ.முன்னடியான்

புதுச்சேரியில் புதிதாக 104 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் இன்று(ஜூலை 16) வெளியிட்ட தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 6,119 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இவற்றில் புதுச்சேரியில்- 87, காரைக்காலில்-7, மாஹேவில்- 10 பேர் என மொத்தம் 104 (1.70 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யயப்பட்டுள்ளது. ஏனாமில் யாருக்கும் பாதிப்பில்லை.

இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 19 ஆயிரத்து 509 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 193 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 1,055 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 1,248 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

புதுச்சேரியில் மேலும் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,775 ஆகவும், இறப்பு விகிதம் 1.49 சதவீதமாகவும் உள்ளது. இதனிடையே புதிதாக 161 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 16 ஆயிரத்து 486 (97.47 சதவீதம்) ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 14 லட்சத்து 13 ஆயிரத்து 400 பேருக்கு பரிசோதனை செய்ததில் 12 லட்சத்து 7 ஆயிரத்து 165 பேருக்கு தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. மேலும், 6 லட்சத்து 26 ஆயிரத்து 24 பேருக்கு (2வது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 குழந்தைகளுக்கு கரோனா:

புதுச்சேரியில் தற்போது வரை கரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 13 குழந்தைகளுக்கு பரிசோதனை மேற்கொண்டதில், 9 குழந்தைகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 1 முதல் 5 வயதுக்குட்பட்ட 7 குழந்தைகளும், 5 வயதுக்கு மேற்பட்ட 2 குழந்தைகளும் அடங்குவர்.

இதே போல, கரோனா உறுதி செய்யப்பட்ட தாயுடன் அனுமதிக்கப்பட்டுள்ள 4 பச்சிளங்குழந்தைகளும் உள்ளனர். இவர்கள் அனைவரும் புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி பிரத்யேக கரோனா குழந்தைகள் நலப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்