இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை கோரி தீர்மானம்; வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் தகவல்

By எஸ்.நீலவண்ணன்

தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வலியுறுத்தி, பட்ஜெட் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என சிறுபான்மையின மற்றும் வெளிநாடுவாழ் நலத் துறை அமைச்சர் கே.எஸ். மஸ்தான் தெரிவித்துள்ளார்.

சுமார் 80 ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கைத் தமிழ்க் குடும்பங்கள் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அகதிகள் முகாம்களில் வசிக்கின்றனர். இவர்களில் 30 ஆயிரம் பேர் இந்திய வம்சாவழியில் வந்தவர்கள்.

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில், ‘அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின், பௌத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இலங்கையில் இருந்து வந்த தமிழ் மக்களுக்கு குடியுரிமை வாய்ப்பு தரப்படவில்லை.

இதுகுறித்து தமிழக சிறுபான்மையினர் நலன், வெளிநாடுவாழ் தமிழர்கள் நலன் துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 108 அகதி முகாம்களில் 106 முகாம்களில் இலங்கை தமிழர்கள் வாழ்கின்றனர். இவர்கள் தங்களுக்கான அடிப்படை வசதிகள் கிடைக்கப் பெற்றார்களா என சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் இவர்களுக்கு கரோனாநிவாரண நிதியாக ரூ.5.42 கோடி வழங்கப்பட்டுள்ளது.

‘இவர்களுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த சட்டபேரவை கூட்டத் தொடரில் ஆளுநர் உரையில், இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்களும், திருத்தங்களும் மேற்கொள்ள மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும் என கூறப்பட்டுள்ளது.

இலங்கை தமிழர்கள் முகாமை விட்டு வெளியே சென்று வீடு திரும்ப உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி, அவர்களுக்கு கால அவகாசம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

மேலும்