மத்திய அரசை 'ஒன்றிய அரசு' என அழைப்பதைக் கைவிட வேண்டும்: மதுரை பாஜக செயற்குழுவில் தீர்மானம்

By கி.மகாராஜன்

மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பதை கைவிட வேண்டும் என்று தமிழக முதல்வரை மதுரை பாஜக கேட்டுக்கொண்டுள்ளது.

மதுரை மாநகர் மாவட்ட பாஜக செயற்குழு கூட்டம், மாவட்ட தலைவர் கே.கே.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலர் ஸ்ரீனிவாசன், துணைத் தலைவர் ஏ.ஆர்.மகாலெட்சுமி, முன்னாள் மாவட்ட தலைவர் சசிராமன், மாவட்ட துணைத் தலைவர்கள் ஹரிகரன், கராத்தே ராஜா, ஊடக பிரிவு செயலர் ராம்குமார், வழக்கறிஞர் பால்பாண்டி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் திமுக அரசு பிரிவினைவாத சிந்தனையை உருவாக்கும் விதத்தில் மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பதற்கு கண்டனம் தெரிவித்து, மீண்டும் மத்திய அரசு என அழைக்க தமிழக முதல்வரை கேட்டுக்கொள்வது, இந்து கல்வி நிறுவனங்களை அச்சுறுத்துவது, ஆன்மிகவாதிகளை பயமுறுத்துவது, அரசுக்கு எதிராக கருத்து சொல்பவர்களை கைது செய்யும் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிப்பது, சட்டப் பேரவையில் ஆளுனர் உரையில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை இடம் பெறாததை பாராட்டுவதாக ஈஸ்வரன் எம்எல்ஏ பேசியதை பேரவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.

மதுரை ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்கு மத்திய அரசு முழு நிதி வழங்கிய பிறகும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும், வைகை நதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நதியில் உள்ள முட்செடிகளை வெட்டி மேடு, பள்ளங்களை சரி செய்ய வேண்டும், பெரியார் பேருந்து நிலையம் முதல் யானைக்கல் வரை மேம்பாலம் அமைப்பது, புதிதாக கட்டப்படும் ஒருங்கிணைந்த பேருந்து நிலை வளாகத்துக்கு மீனாட்சியம்மன் பெயர் சூட்ட வேண்டும் என தீர்மானம் நிறைவேறறப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

இந்தியா

40 mins ago

உலகம்

54 mins ago

வணிகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

5 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்