பிப். 22 முதல் தேமுதிக வேட்பாளர் நேர்காணல்: விஜயகாந்த் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

தேமுதிக சார்பில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் நேர்காணல் கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வரும் 22-ம் தேதி முதல் மார்ச் 1 வரை நடக்கவுள்ளது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''தேமுதிக சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு செய்தவர்களை நான் நேர்காணல் செய்யவுள்ளேன். இந்த நேர்காணல் கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வரும் 22-ம் தேதி முதல் மார்ச் 1-ம் தேதி வரை நடக்கவுள்ளது.

அதன்படி திருவள்ளூர்,கன்னியாகுமரி,திருநெல்வேலி,நீலகிரி மாவட்டங்களில் உள்ள சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு 22-ம் தேதி நேர்காணல் நடத்தப்படும்.

தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு 23-ம் தேதியும், மதுரை, விருதுநகர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு 24-ம் தேதியும், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், கரூர், பெரம்பலூர், அரியலூர், மேற்கு சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு 25-ம் தேதியும், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு 26-ம் தேதியும் நேர்காணல் நடக்கவுள்ளது.

நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு 27-ம் தேதியும், நாமக்கல், சேலம், கடலூர், மாவட்டங்களுக்கு 28-ம் தேதியும், திருச்சிராப்பள்ளி, வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை மாவட்டங்களுக்கு 29-ம் தேதியும், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்துக்கு 1-ம் தேதியும் நேர்காணல் நடத்தப்படவுள்ளது.

நேர்காணலுக்கு வருபவர்கள் தங்களது கட்சியின் உறுப்பினர் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, கல்விச் சான்றிதழ், தனி தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்கள் தமது சாதிச் சான்றிதழ் ஆகியவற்றின் அசலை நேர்காணலுக்கு எடுத்து வர வேண்டும்'' என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தொழில்நுட்பம்

7 hours ago

சினிமா

8 hours ago

க்ரைம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்