வீட்டு உரிமையாளர் அனுமதியின்றி சுவர் விளம்பரம் செய்யக் கூடாது: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

By செய்திப்பிரிவு

வீட்டு உரிமையாளரின் அனுமதி இல்லாமல் சுவர் விளம்பரம் செய்யக்கூடாது என்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துவிட்டன. நடத்தை விதிமுறைகள் குறித்து தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாவது:

*வீட்டு உரிமையாளர் அனுமதி இல்லாமல் கட்டிடங்களிலோ, காம்பவுண்ட் சுவற்றிலோ விளம்பரம் செய்யக் கூடாது. உரிமையாளரிடம் அனுமதி பெற்று விளம்பரம் செய்யலாம். அனுமதி பெற்ற விவரத்தை தேர்தல் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்

*அரசு கட்டிடங்கள் மற்றும் அலுவலகங்களில் கட்சிகளின் சின்னம் வரையக் கூடாது.

*ஆளுங்கட்சியின் சாதனை களை அரசு செலவில் விளம்பரம் செய்யக் கூடாது

*உறுதிப்படுத்தப்படாத குற்றச் சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு மற்ற கட்சியினரை விமர்சிக்கக் கூடாது.

*கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்யக் கூடாது

*மற்ற கட்சியினர் நடத்தும் கூட்டங்கள், ஊர்வலங்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது

*மாற்றுக் கட்சியினர் ஒட்டும் சுவரொட்டிகளை மறைப்பதோ, அகற்றவோ கூடாது

தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான அனைத்து விதிமுறை களையும் www.elections.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

இந்தியா

26 mins ago

இந்தியா

36 mins ago

சுற்றுச்சூழல்

38 mins ago

இந்தியா

37 mins ago

இந்தியா

51 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

59 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்