வெள்ள நிவாரணத்தில் முறைகேடு செய்த 3 பேர் சஸ்பெண்ட்

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில், அண்மையில் பெய்த கனமழையால் விளைநிலங்கள் மற்றும் பயிர்கள், கரும்புகள் தண்ணீரில் முழ்கின. சேதமடைந்த பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.13,500 நிவாரண நிதியாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இதையடுத்து, வேளாண்துறை இணை இயக்குநர் தலைமையில், உதவி வேளாண் அலுவலர்கள் மாவட்டம் முழுவதும் பயிர் சேத விவரங்களை சேகரித்து, பாதிக்கப்பட்ட வர்களுக்கு நிவாரணம் வழங்கினர். இந்நிலை யில், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்துக்குட்பட்ட பிச்சுவாக்கம் கிராமத்தில் பயிர்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கியதில், முறைகேடு நடந்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள், மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் முறைகேடு குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், விளைநிலங்களே இல்லாத நபர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதை தொடர்ந்து, பிச்சுவாக்கம் விஏஓ முத்தரசன், உதவி வேளாண் அலுவலர் சுந்தரமூர்த்தி, வேளாண் கூட்டுறவு சங்க செயலாளர் சின்னகண்ணு ஆகிய மூவரை, பணியிடை நீக்கம் செய்ய சம்பந்தப்பட்ட துறைக்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்தார். இதன்பேரில், மேற்கண்ட மூவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

இந்தியா

52 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்