தொழில் நிறுவன ஊழியர்கள் - கரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்: பொது சுகாதாரத் துறை இயக்குநர் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட துணை சுகாதாரத் துறை இயக்குநர்கள், சென்னை மாநகராட்சி சுகாதார அதிகாரி ஆகியோருக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

தொழில் நிறுவனங்கள் மற்றும் சேவை நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க வேண்டும். கரோனா தடுப்புக்கான நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை அனைத்து நிறுவனங்களும் முறையாக பின்பற்றுவதை உறுதி செய்தல் முக்கியம்.

தொழில் நிறுவனங்களுக்கு வாரம் ஒரு முறை நேரடியாகச் சென்று ஆய்வு நடத்த வேண்டும். பணியாளர்களின் உடல் வெப்ப நிலையை பரிசோதித்த பிறகே, அவர்களை நிறுவனங்களுக்குள் அனுமதிக்க வேண்டும்.

நோய்த் தொற்று அறிகுறிகள் இருக்கும் ஊழியரை தனிமைப்படுத்தி, பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதையும், மருத்துவக் காப்பீடு கட்டாயமாக இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

க்ரைம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

உலகம்

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்