மர்மமான முறையில் உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம்: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

By செய்திப்பிரிவு

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆட்டோ ஓட்டுநரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடியிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சூட்டுமலை ரெட்டை பொத்தை அடிவாரம் அருகில் ஆட்டோ ஓட்டுநர் ஷேக் முகம்மது காஜா முகைதீன் என்பவர் கடந்த 21-ம் தேதி அன்று இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை செய்து வருகின்றனர்.

ஷேக் முகம்மது காஜா முகைதீன் தந்தை சாகுல் ஹமீது தனது மகன் வருமானத்தில் தான் குடும்பத்தை நடத்தி வந்ததாகவும், தற்போது மகனின் இறப்பால் குடும்பம் வறுமையில் வாடுவதாகவும், அவரது குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு உதவ வேண்டி கோரிக்கை விடுத்துள்ளார். அவரது கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, உயிரிழந்த ஷேக் முகம்மது காஜா முகைதீன் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், ஷேக் முகம்மது காஜா முகைதீனை கொலை செய்தவர்களை விரைந்து கைது செய்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறையினருக்கு ஆணையிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

48 mins ago

இந்தியா

51 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

53 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்