பிரபலமான பத்தமடை பாய் விற்பனையை சென்னை, பெங்களூரு மாநகரங்களில் அதிகரிக்க உதவ வேண்டும்: ‘தி கிராஃப்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா’வுக்கு திருநெல்வேலி ஆட்சியர் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

பிரபலமான பத்தமடை பாய் விற்பனையை சென்னை, பெங்களூரு போன்ற மாநகரங்களில் அதிகரிக்க உதவ வேண்டும் என்று ‘தி கிராஃப்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா’வுக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வி.விஷ்ணு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

‘தி கிராஃப்ட்ஸ் கவுன்சில் ஆஃப்இந்தியா’ (The Crafts Council of India) சார்பில் திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையில், பாரம்பரியமாக கோரை பாய்களை நெய்து வரும்மகளிருக்கு தொழில்நுட்பம் மற்றும்சந்தைப்படுத்துதல் பயிற்சி வழங்கப்பட்டது. அந்த பயிற்சி குறித்த அனுபவ பகிர்வு நிகழ்ச்சி இணையவழியில் நேற்று நடைபெற்றது. அதில் ‘தி கிராஃப்ட் கவுன்சில் ஆஃப்இந்தியா’ தலைவர் கீதா ராம் பங்கேற்று தொடக்கவுரையாற்றினார்.

தொடர்ந்து, மகளிருக்கு வழங்கப்பட்ட பயிற்சி தொடர்பாக ‘தி கிராஃப்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா’ பொருளாளர் சுதா ரவி கூறியதாவது:

1990-ல் ‘தி கிராஃப்ட்ஸ் கவுன்சில்ஆஃப் இந்தியா’ பத்தமடை குழு வுக்கு அகில இந்திய விருதை பெற்றுத் தர உதவியது. இதன் மூலமாகஇந்த பாய் நெய்யும் அசாத்தியமான நுட்பம் பொது மக்களுக்குத் தெரியவந்தது. இதன் பிறகே, பத்தமடை பாய் நெய்வோரைப் பற்றிய விவரங்கள் இந்தியாவின் பிறஇடங்களுக்கு தெரியவந்தன. தொடர்ந்து ‘தி கிராஃப்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா’, பாய் நெய்பவருடன் வடிவமைப்பிலும் நெய்யும் திறனிலும் கை கொடுத்து, அவற்றை விற்கும் திறனையும் வகுத்துத் தந்தது.

பத்தமடையுடன் நீடித்த உறவு

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் புது விதமான சாயங்களும், அவற்றை நீடித்து தங்க வைக்கும் முறை குறித்த சாயம் தோய்க்கும் பயிற்சியும் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ஆட்சியர் வி.விஷ்ணுவின் முயற்சியாலும், மத்திய அரசின்சங்கல்ப், உலக வங்கி உதவியால்பாய் நெய்பவர்கள் குழுவின் திறனை மேம்படுத்த 40 மகளிருக்கு ‘தி கிராஃப்ட் கவுன்சில் ஆஃப் இந்தியா’ பயிற்சி அளித்தது. அதில்புதிதாக பல தரமான பொருட்களும் அவைகளைச் சீராக படைக்க இறுதிகட்ட நுட்பங்களும் கற்றுத்தரப்பட்டன.

பயிற்சி பெற்ற மகளிரைக் கொண்ட மகளிர் குழு உருவாக்கப்பட உள்ளது. அவர்கள், மூலப்பொருட்களை வாங்க கைவினை கவுன்சில் சார்பில் சுழல் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் பத்தமடையுடன் ‘தி கிராஃப்ட் கவுன்சில் ஆஃப் இந்தியா’வின் உறவு நீடித்த வலுவுடன் இயங்கி வருகி றது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பயிற்சியில் பங்கேற்ற மகளிர் கூறும்போது, “இப்பயிற்சிமூலம் பாய் உற்பத்தியாளராக இருந்த நாங்கள் விற்பனையாளராகவும் மாறி இருக்கிறோம்” என்றனர்.

மாவட்ட ஆட்சியர் வி.விஷ்ணு பங்கேற்று பேசியதாவது:

பாய் நெய்வதை கற்றுக்கொடுக்க பத்தமடை பகுதியில்பயிற்சி மையம் ஒன்று அமைக்கப்படும். திருநெல்வேலிக்கு வரும்சுற்றுலா பயணிகளுக்கு பத்தமடைபாய் எங்கு விற்கிறது என தெரியவில்லை. அதனால் திருநெல்வேலியில் அதற்கு ஒரு இடம் ஏற்படுத்தப்படும். இந்த பாயை ஆன்லைனில் விற்க, ஆன்லைன் வர்த்தகநிறுவனங்களுடன் பேசி வருகிறோம். ‘தி கிராஃப்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா’, மகளிருக்கு பயிற்சி வழங்கியதோடு நிற்காமல், பத்தமடை பாயை திருநெல்வேலி, அதை சுற்றியுள்ள மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் அளவில் சந்தைப்படுத்துவதற்கு பதிலாக சென்னை, பெங்களூரு போன்ற மாநகரங்களில் விற்பனையை அதிகரிக்க உதவ வேண்டும். பெரியஆர்டர்களைப் பெற்றுத் தர வேண் டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் ‘தி கிராஃப்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா’வின் கவுரவ செயலர் இ.ராஜேஸ்வரி, இணை செயலர் லட்சுமி, திட்ட அலுவலர் லதா, பத்தமடை கூட்டுறவு சங்க இயக்குநர் சையத் சுலைமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

மேலும்