5 அரசு மின்துறை நிறுவனங்களின் இழப்பு 2019-ல் ரூ.13,176 கோடி: இந்திய தணிக்கைத் துறை தலைவர் அறிக்கையில் தகவல்

By செய்திப்பிரிவு

தமிழக மின்துறையின் 5 நிறுவனங்களின் மொத்த இழப்பு 2019-ல்ரூ.13,176 கோடியாக இருந்ததாக இந்திய தணிக்கைத் துறை தலை
வர் அறிக்கை தெரிவித்துள்ளது.

சட்டப்பேரவையில் கடந்த 2018,19-ம் ஆண்டுகளுக்கான இந்திய தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்
பட்டன. இவற்றில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் உள்ள 75 பொதுத்துறை நிறுவனங்களில் ரூ.1,97,153 கோடியை அரசு முதலீடு செய்துள்ளது. இவற்றில் 5 மின் துறை நிறுவனங்களில் மட்டும் ரூ.1,75,436 கோடியை அதாவது 88.98 சதவீதத்தை முதலீடு செய்துள்ளது.

இந்த மின்துறை நிறுவனங்களில் கடந்த 2018-19 நிதியாண்டில் தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும்
பகிர்மானக் கழகம் (டான்ஜெட்கோ), தமிழ்நாடு மின் தொடரமைப்பு நிறுவனங்கள் மொத்தம்ரூ.13,259.40 கோடிக்கு இழப்பை
சந்தித்தன. ஆனால், மின்விசைநிறுவனம் ரூ.83.20 கோடி லாபம்ஈட்டியதால், அந்த ஆண்டில் ஒட்டுமொத்த இழப்பு ரூ.13,176 கோடி. டான்ஜெட்கோவில் இழப்பு அதிகரித்ததற்கு மின்கொள்முதல் மற்றும் உற்பத்தி செலவோடு பணியாளர் மற்றும்நிதிச் செலவினங்கள் அதிகரிப்பே முக்கிய காரணமாகும்.

இதன்மூலம் கடந்த 2014 முதல் 2019-ம் ஆண்டு வரை மின்நிறுவனங்களின் மொத்த இழப்பு என்பது ரூ.92,027.97 கோடி.இதிலும் மின் விசை நிறுவனம் மட்டுமே நல்ல நிலையில் உள்ளது.

உதய் திட்டத்தில் கையெழுத்திட்ட பிறகு நிதி கிடைத்தபோதிலும், செயல்பாட்டு அளவுகளை எட்டாதது, மின் கட்டணத்தை உயர்த்தாதது ஆகியவற்றால் நிதி மாற்றம் ஏற்படவில்லை.

நிலக்கரியை பொருத்தவரை,இறக்கிவைக்க தனியார் நிலக்கரி முனையத்தை பயன்படுத்தியதால் ரூ.41.68 கோடி தவிர்க்கக்
கூடிய செலவு ஏற்பட்டது. வடசென்னையில் இருந்து நிலக்கரியை மேட்டூருக்கு அனுப்பியதன் மூலம் ஏற்பட்ட இழப்பால், டான்ஜெட்கோ நிறுவனத்துக்கு ரூ.58.37 கோடி இழப்புஏற்பட்டது. இதுதவிர, ரயில் சரக்குப் பெட்டியில் அனுமதிக்கப்
பட்ட அளவுக்கு நிலக்கரி ஏற்றப்படாததால், எவ்வித பயனுமின்றி ரூ.101.35 கோடி சரக்கு கட்டணம்செலுத்தப்பட்டது. 2019-ம் ஆண்டு
நிலவரப்படி 3 அனல்மின் நிலையங்களில் உள்ள சாம்பல் அகழியில், 62.15 டன் சாம்பல் குவிந்திருந்தது. அகழியில் தொடர்ந்து சாம்பல் சேகரிக்கப்பட்டதால், பக்கிங்ஹாம் கால்வாய், கொசஸ்தலை ஆறு ஆகியவற்றின் நீர் அசுத்தமாகியுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

22 mins ago

விளையாட்டு

13 mins ago

தமிழகம்

37 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

மேலும்