கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு

By செய்திப்பிரிவு

திருப்போரூர் அரசு மருத்துவமனை எதிரே ஆக்கிரமிப்பாளர்களின் பிடியிலிருந்த கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான 45 சென்ட் நிலம், கோயில் நிர்வாகத்தின் நடவடிக்கையால் நேற்று மீட்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் நகரில் அமைந்துள்ள கந்தசுவாமி கோயிலுக்கு சென்னை,செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறுபகுதிகளில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நிலங்கள் மற்றும் கட்டிடங்கள் உள்ளன.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலங்களை வருவாய்த் துறையுடன் இணைந்து, கோயில் நிர்வாகத்தினர் கடந்த சில நாட்களாக அளவீடு செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நிலஅளவீட்டு பணியின்போது, திருப் போரூர் அரசு மருத்துவமனை எதிரே கோயிலுக்கு சொந்தமான 45 சென்ட் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதை, வருவாய்த் துறையினர் உறுதி செய்தனர்.

இதையடுத்து, அறநிலையத் துறையின் காஞ்சிபுரம் மாவட்ட இணை ஆணையர் ஜெயராமன் உத்தரவின்பேரில், செயல் அலுவலர் சக்திவேல் தலைமையிலான கோயில் பணியாளர்கள் நிலத்திலிருந்த அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்டனர்.

மேலும், அப்பகுதியில் கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலம் என அறிவிப்பு பலகை அமைக்கப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ.3 கோடி என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

59 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

9 mins ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்