மாநில உரிமைகளில் மத்திய அரசு தலையிடக் கூடாது: ப.சிதம்பரம் கண்டனம்

By செய்திப்பிரிவு

காரைக்குடியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமை வகித்தார். மாங்குடி எம்எல்ஏ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பிறகு ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும். நீட் தேர்வை மாநிலங்கள் விருப்பப்படி நடத்திகொள்ளலாம். மத்திய அரசு தேவையில்லாமல் மாநில அரசுகளின் உரிமைகளில் தலையிடக் கூடாது. கரோனாவை கட்டுப்படுத்த மக்களுக்கு சுயக் கட்டுப்பாடும் அவசியம்.

காங்கிரஸ் ஆட்சியில் கச்சா எண்ணெய் பீப்பாய் 105 டாலராக இருந்தபோது பெட்ரோல் விலை ரூ.60 முதல் ரூ.65-ஆக இருந்தது. தற்போது 70 டாலராக உள்ள நிலையில் பெட்ரோல் விலையை ரூ.100 ஆக மத்திய அரசு உயர்த்திஉள்ளது.

6 மாதங்களில் 60 கோடி தடுப்பூசிகள் மட்டுமே இந்திய நிறுவனங்கள் உற்பத்தி செய்து வழங்க முடியும். இதனால் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவும்.மேலும் மத்திய அரசு 3 தடுப்பூசிகளுக்குத்தான் இதுவரைகொள்கைரீதியாக அனுமதி தந்துள்ளது. பைசர், மார்டனா வருகிறது என்பதெல்லாம் முழுக்க, முழுக்க பொய் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

வணிகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தொழில்நுட்பம்

4 hours ago

சினிமா

5 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

க்ரைம்

7 hours ago

மேலும்