சென்னை அரசு மருத்துவமனைகளில் மீண்டும் எலி தொல்லை: நோயாளிகளின் கால்களை கடிக்கிறது

By சி.கண்ணன்

சென்னை அரசு மருத்துவமனைக ளில் மீண்டும் எலி தொல்லை அதிக மாகி வருகிறது. இரவு நேரங்களில் வார்டுகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் கால்களை எலிகள் கடித்துவிட்டு சென்றுவிடுகின்றன.

சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி தாய்-சேய் நல மருத்துவமனையில் 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எலி கடித் ததால் குழந்தை இறந்ததாக பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சுற்றித்திரியும் எலிகளைப் பிடிக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது. அப்போது ஒரே வாரத்தில் அரசு மருத்துவமனைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட எலிகள் பிடிபட்டன.

இவை தவிர மருத்துவமனை வளாகத்தில் இருந்த நாய்கள் மற்றும் பூனைகளும் பிடிக்கப் பட்டன. இதனால் அரசு மருத்துவ மனைகளில் எலி தொல்லை கொஞ் சம் கொஞ்சமாக குறையத் தொடங்கி யது. ஓர் ஆண்டாக எலிகளைப் பிடிக்க மாநகராட்சி ஊழியர்கள் வருவதில்லை. இதனால் அரசு மருத்துவமனைகளில் மீண்டும் எலி தொல்லை அதிகமாகி வருகிறது.

நோயாளிகளை கடிக்கும் எலி

இரவு நேரங்களில் சுற்றி வரும் எலிகள் மருத்துவமனை வார்டுகளில் உள்ள படுக்கைகள் மற்றும் அங்குள்ள துணிகளை கடித்து கிழித்துவிட்டு சென்றுவிடு கின்றன. சில சமயங்களில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் கால்களையும் கடித்து வைத்து விடுகின்றன. மேலும் நோயாளிகள் வைத்திருக் கும் பழங்களையும் எலிகள் தின்று விடுகின்றன. எலிகளுக்கு பயந்து நோயாளிகள் இரவு நேரங்களில் தூங்காமல் இருக்கின்றனர்.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தும் எவ்விதமான நடவடிக் கையும் எடுக்கவில்லை என நோயாளிகள் தெரிவிக்கின் றனர். எழும்பூரில் உள்ள அரசு மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் எலி தொல்லை யுடன், நாய் தொல்லையும் அதிகமாக இருப்பதாக நோயாளி கள் தெரிவிக்கின்றனர்.

குடியிருப்பு பகுதியிலும் அதிகரிப்பு

இது ஒருபுறம் இருக்க, சென்னையில் குடியிருப்பு பகுதிக ளிலும் எலி தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெருக்களில் குவியும் குப்பைகளை மாநகராட்சி ஊழியர்கள் சரிவர அகற்றாததால், தொட்டிகளில் குப்பைகள் மலை போல குவிந்து கிடக்கிறது. இதனால் எலிகளின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.

1913-க்கு புகார் தரலாம்

இது தொடர்பாக மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னை நகரில் எலி பிடிக்கும் திட்டம் 1994-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி தாய்-சேய் நல மருத்துவ மனையில் எலி கடித்து குழந்தை இறந்ததாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, எலி பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

சென்னையில் 200 கோட்டங்களுக்கும் எலிகளைப் பிடிக்க கோட்டத்துக்கு தலா சுமார் 20 ஊழியர்கள் உள்ளனர். அரசு மருத்துவமனைகள், திருமணமண்டபங்கள், குப்பைத் தொட்டிகள், வணிக வளாகம் இருக்கும் பகுதி, கழிப்பிடங்கள் என எலி தொல்லை அதிகம் உள்ள இடங்களில் மருந்து வைத்து எலிகள் பிடிக்கப்படுகின்றன.

சென்னை மாநகராட்சியில் புகார் பிரிவு இயங்கி வருகிறது. குடியிருப்பு பகுதிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் எலி தொல்லை குறித்து, 1913 என்ற நான்கு இலக்க எண்ணில் பொதுமக்கள் புகார் கொடுக்கலாம். அந்த புகாரின்படி ஊழியர்கள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று மருந்து வைத்து எலிகளைப் பிடிப்பார்கள்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

க்ரைம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

உலகம்

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்