வாகன தணிக்கையில் ஈடுபடும் போலீஸார் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும்: சென்னை காவல் ஆணையர் அறிவுரை

By செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் கரோனா ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ளது. இ-பதிவு சான்றிதழ் இல்லாமல் பயணம் செய்யும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் நேற்று முன்தினம் மட்டும் கரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியது தொடர்பாக 4,280 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2,297 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

முகக்கவசம் அணியாத 3,124 பேர் மற்றும் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காத 192 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. போலீஸாரின் வாகன தணிக்கை மற்றும் கண்காணிப்பை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

காவல்துறையினர் பொது மக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மேலும் பொதுமக்கள் ஊரடங்கு விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

39 mins ago

ஜோதிடம்

54 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்