கரோனா நிவாரண நிதி வழங்காமலே பணம் வழங்கியதாக குறுஞ்செய்தி அனுப்பிய கடை ஊழியர் பணியிடை நீக்கம்

By செய்திப்பிரிவு

கூடுவாஞ்சேரியில் குடும்ப அட்டைதாரருக்கு ரூ.2,000கரோனா நிவாரண நிதி வழங்காமலே பணம் வழங்கியதாக குறுஞ்செய்தி அனுப்பியகடை ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி, நெல்லிக்குப்பம் சாலை, கடை எண் டி.பி.025பி1 கொண்ட நியாய விலைக் கடை யிலிருந்து ராதாகிருஷ்ணன் என்பவருக்கு, கரோனா நிவாரண நிதி ரூ.2,000 பெறாத நிலையில், பணம் பெற்றதாக குறுஞ்செய்தி சென்றுள்ளது.

இது தொடர்பாக செய்தி ‘இந்து தமிழ்' நாளிதழில் நேற்று வெளியானது.

இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் மொத்த விற்பனை பண்டக சாலை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில் தவறு நடைபெற்றிருப்பது தெரியவந்தது. எனவே, கடை ஊழியர் சங்கர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

அரசின் நிவாரண நிதியை வழங்குவதில் மோசடி செய்த கடை ஊழியர் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டது வரவேற்கத்தக்கது.

இனிவரும் காலங்களில் மற்ற கடை ஊழியர்களும் இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்கு இந்தபணியிடை நீக்கம் ஒரு பாடமாக இருக்கும்.

இனிமேல் இதுபோல் நடைபெறாமல் இருக்க அரசு பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக நிதியை செலுத்த வேண்டும் அல்லது பயோமெட்ரிக்முறையை கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளுடன் அமல்படுத்த வேண்டும். சமூக அக்கறையுடன் செயல்பட்ட ‘இந்துதமிழ்' நாளிதழுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

சினிமா

6 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

30 mins ago

க்ரைம்

36 mins ago

க்ரைம்

45 mins ago

இந்தியா

41 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்