மருத்துவமனை வளாகத்திலேயே எரிக்கப்படும் குப்பை, மருத்துவக் கழிவுகள்: நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் அபாயம்

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை யில் சேகரமாகும் குப்பை மற்றும்மருத்துவக் கழிவுகள் மருத்துவமனை வளாகத்திலேயே எரிக்கப்படுவதால் அப்பகுதியில் புகை மூட்டம் ஏற்படுகிறது.

இதனால் மருத்துவமனைக்கு வரும் சிலருக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சினை ஏற்படும் அபாயம் இருப்பதாகசமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டு கின்றனர்.

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் தினந்தோறும் மருத்துவக் கழிவு, குப்பை அதிக அளவில் சேகரமாகிறது. இவை முறைப்படி அப்புறப்படுத்தப்பட்டு அழிக்கப்பட வேண்டும். மருத்துவக் கழிவுகள் அதற்கென உள்ள நிறுவனங்களில் கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட வேண்டும்.

ஆனால், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் பிணவறை அருகேஇந்தக் கழிவுகளை போட்டு எரிக்கின்றனர். இதனால் மருத்துவமனைக்கு கரோனா பாதிப்பால் மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சினையுடன் வருபவர்களுக்கு மேலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

மருத்துவமனை நிர்வாகம் மருத்துவமனை வளாகத்துக்குள் குப்பையை எரிக்கக் கூடாது. அவற்றை அப்புறப்படுத்தி வெளியிடங்களில் எரிக்க வேண்டும். குப்பையை மருத்துவமனை வளாகத்துக்குள் எரிக்கும் ஊழியர்களை எச்சரிக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்துகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

50 secs ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

47 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

43 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்