திருமங்கலம் - கொல்லம் நான்குவழிச் சாலை திட்டத்தை செயல்படுத்த முயற்சி: நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் கோரிக்கை

By த.அசோக் குமார்

மாற்றுப்பாதையில் அமைக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காமல் திட்டமிடப்பட்ட அதே பாதையில் திருமங்கலம்-கொல்லம் நான்குவழிச் சாலை திட்டத்தை செயல்படுத்த முயற்சிப்பதை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் என்எச் 744 நஞ்சை மீட்பு மற்றும் சாலை மாற்று அமைப்பு சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது:

தற்போது உள்ள திருமங்கலம் - கொல்லம் சாலைக்கு பதிலாக நான்குவழிச் சாலை அமைக்க கடந்த 2018 நவம்பர் மாதம் நெடுஞ்சாலைத் துறையால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

புதிய பாதையானது விருதுநகர் மாவட்டம் சத்திரப்பட்டி, மீனாட்சிபுரம், புத்தூர், தென்காசி மாவட்டம் சிவகிரி, வாசுதேவநல்லுர் மேற்கு, புளியங்குடி கிழக்கு, வடகரை வழியாக புளியரை செல்கிறது.

புத்தூரில் இருந்து புளியரை வரை முழுமையாக விவசாய நிலமாக இருப்பதால் விவசாயிகள் எதிர்ப்பல் சாலை நில அளவைப் பணி அப்போதைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

கடந்த 2018 நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பு 2019 நவம்பர் மாதம் காலாவதியானது. புதிதாக அமைய உள்ள சாலை விளைநிலங்கள் வழியாகவும், தற்போது ளள்ள சாலையை விட அதிக தூரம் இருப்பதாலும், வன உயிரினங்கள் நடமாடும் பகுதி வழியாக செல்வதாலும் மாவட்ட தலைநகரான தென்காசி, சுற்றுலா தலமான குற்றாலத்தை இணைக்காமல் செல்வதாலும் மாற்றுப் பாதையில் அmமைக்க விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறுகட்ட போராட்டங்கள் நடத்தியதுடன் அரசுக்கு கோரிக்கையும் வைத்தனர்.

சாலையை மாற்நறி அமைக்கும்பட்சத்தில் இந்த குறைகள் இல்லாமல் சாலையை 10 கிலோமீட்டர் குறைவான பயண தூரத்தில் மற்றும் விவசாய நிலங்களில் பெரிதும் பாதிப்பை குறைத்து, வன விலங்குகளுக்கு பாதிப்பின்றி, தென்காசி, குற்றாலத்தை இணைத்து சாலை அமைக்க முடியும். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்பி, தனுஷ் எம்.குமார் எம்பி ஆகியோரிடம் கடந்த ஆட்சிக்காலத்தில் மனு அளிக்கப்பட்டது. மனுவை ஏற்றுக்கொண்டு இத்திட்டத்தை மாற்றி அமைப்பதாக உறுதியளித்துள்ளனர்.

இந்நிலையில், 2018-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அந்த திட்டத்தை பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் மாற்று சாலை கோரிக்கைகளை பரிந்துரை செய்ாமல், தற்போது அமைந்துள்ள அரசிடம் அனுமதி பெறாமல் பழைய திட்டத்தை தற்போது செயல்படுத்தி வருகின்றனர். இந்தத் திட்டத்தை கைவிட்டு, மாற்று சாலை அமைக்க பரிந்துரை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 mins ago

வாழ்வியல்

37 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்