வெள்ளத்தில் மூழ்கிய குற்றப்பிரிவு அலுவலகம்: முக்கிய ஆவணங்கள் அனைத்தும் நாசம்

By செய்திப்பிரிவு

கிண்டி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகமும் வெள்ளத்தில் மூழ்கியதால் முக்கிய ஆவணங்கள் அனைத்தும் அழிந்து விட்டன.

சென்னை மழை வெள்ளம் கிண்டி தொழிற்பேட்டையையும் விட்டு வைக்கவில்லை. இங்குள்ள பல தொழிற்சாலைகள் தண்ணீரில் மூழ்கி விட்டன. இங்கு 20 அடி உயரத்துக்கு வெள்ள நீர் இருந்ததாக கூறப்படுகிறது. இன்னும் இந்த பகுதியில் வெள்ளநீர் முழுமையாக வடியவில்லை. கிண்டி தொழிற்பேட்டைக்குள் பொருளாதார குற்றப்பிரிவு தலைமை அலவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் தரை மற்றும் முதல் தளங்கள் வெள்ளத்தில் மூழ்கி விட்டன.

பொருளாதார குற்றப்பிரிவு தலைமை அலுவலகம் 3 தளங்களை கொண்டது. தரை தளம் பார்க்கிங் பகுதி. 1, 2-வது தளங்களில் அதிகாரிகள் அலுவலகங்கள் உள்ளன. வெள்ளம் தரை தளத்தை முழுவதுமாக நிரப்பி முதல் தளத்தில் 6 அடி உயரத்துக்கு தண்ணீர் புகுந்து ஓடியது. தமிழ்நாடு முழுவதும் இந்த துறையின் கீழ் செயல்படும் 3 ஆயிரம் போலீஸாரின் பணி ஆவணங்கள், புலன் விசாரணை ஆவணங்கள், நீதிமன்ற வழக்கு ஆவணங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி நாசம் அடைந்து விட்டன.

முக்கிய ஆவணங்கள் அனைத் தும் நாசம் அடைந்து விட்டதால் மாற்று ஏற்பாடுகள் என்ன செய்ய லாம் என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பல ஆவணங்களை காய வைத்து உலர்த்தும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

இந்தியா

29 mins ago

இந்தியா

56 mins ago

இந்தியா

31 mins ago

இந்தியா

41 mins ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்