ஒருநாள் முழு தளர்வு; ஒருவார தீவிர ஊரடங்குடன் 2 வார ஊரடங்கு அமல்?- தமிழக அரசு முடிவு

By செய்திப்பிரிவு

தமிழக அரசு கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மருத்துவ நிபுணர் குழு, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆலோசனைக் குழுவுடன் நடத்திய ஆலோசனையில் 1 வார தீவிர ஊரடங்குடன், 2 வார ஊரடங்கை அமல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவல் கடந்த ஏப்ரல் மாதம் முதல் திடீரென உயரத் தொடங்கியது. தொற்றுப் பரவலின் இரண்டாம் அலை அதிகரித்ததை அடுத்து படிப்படியாக உயர்ந்த தொற்று எண்ணிக்கை நாள்தோறும் 35,000க்கு மேல் பதிவாகிறது. உயிரிழப்பு தினமும் 300க்கு மேல் உள்ளது. தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க கட்டுப்பாடுகள் அமல், இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என அமல்படுத்தப்பட்டது.

ஆனாலும், பொதுமக்கள் அலட்சியமாக வெளியில் நடமாடியதால் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இதையடுத்து மே 10 அன்று முதல் 2 வார முழு ஊரடங்கை சில தளர்வுகளுடன் அரசு அமல்படுத்தியது. பின்னர் மே 14 அன்று ஊரடங்கில் கட்டுப்பாடு கடுமையாக்கப்பட்டது. ஆனாலும், தொற்று எண்ணிக்கை தொடர்ந்து 35,000 என்கிற எண்ணிக்கையைக் கடந்தே உள்ளது.

மே 24ஆம் தேதியுடன் இரு வார ஊரடங்கு முடிகிறது. இதையடுத்து நேற்று தொற்றுப் பரவல் அதிகம் உள்ள 11 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை நடத்தினார். முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 10.30 மணி அளவில் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் முதல்வருக்கான ஆலோசனைக்கு அமைக்கப்பட்டுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த இரு கூட்டங்களிலும் ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக ஊரடங்கை விடுமுறை நாளாக நினைத்துச் சுற்றுவதால் தொற்றுப் பரவல் கட்டுப்படுத்தப்படவில்லை என வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து ஊரடங்கை மேலும் கடுமையாக்க, தளர்வற்ற ஒருவார தீவிர ஊரடங்குடன் கூடிய 2 வார ஊரடங்கை அமல்படுத்தலாம் என முடிவெடுக்கப்பட்டது.

நாளை ஒருநாள் முழுவதும் தளர்வை அமல்படுத்தி இரவு 9 மணி வரை பொதுமக்கள் தங்களுக்கான பொருட்களை வாங்கிக் கொள்ள அனுமதிப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று மாலைக்குள் வரும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

உலகம்

6 hours ago

வாழ்வியல்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

சினிமா

9 hours ago

க்ரைம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்