48 மணி நேரத்தில் திரட்டப்பட்ட நிதி; கோவை அரசு மருத்துவமனைகளில் ரூ.1 கோடியில் ஆக்சிஜன் கட்டமைப்பு: அமெரிக்க மருத்துவர் தம்பதியினர் ஏற்பாடு

By டி.ஜி.ரகுபதி

அமெரிக்காவில் வசிக்கும் கோவை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் 48 மணி நேரத்தில் ரூ.1 கோடி நிதி திரட்டி, கோவை அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் கட்டமைப்புகளை ஏற்படுத்தித் தந்துள்ளார்.

கோவையில் கடந்த சில தினங்களாக தினமும் சராசரியாக 3,200-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. தொற் றால் பாதிக்கப்பட்டோரில் பெரும் சதவீதத்தினர் தனியார் மருத்துவமனைகளைக் காட்டிலும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனைக்கே அதிக அளவில் வருகின்றனர்.

ஆக்சிஜன் தட்டுப்பாடு

இதனால், அரசு மருத்துவமனை களில் கரோனா நோயாளிகளுக் கான ஆக்சிஜன் தட்டுப்பாடு அதி கரித்துள்ளது. இதையறிந்த, அமெ ரிக்காவின் நவேடா மாகாணத்தில் உள்ள ரினோ நகரில் வசிக்கும் மருத்துவர் ராஜேஷ் ரங்கசாமி - நித்யா மோகன் தம்பதி, தங்களது ‘ஆர்டர் கார்ப்பரேஷன்’ அறக்கட் டளையின் மூலம் 48 மணி நேரத்தில் ரூ.1 கோடி நிதி திரட்டி, கோவை மருத்துவமனைகளுக்கு தேவையான உபகரணங்களை வாங்கி அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக அமெரிக்கா வில் வசிக்கும் மருத்துவர் ராஜேஷ் ரங்கசாமி ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது:

மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த நான், கடந்த 1992-ம் ஆண்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்தேன். தற்போது அமெரிக்காவின் ரினோ நகரில் உள்ள மருத்துவமனையில் மூளை ரத்த நாள அறுவை சிகிச்சை நிபுணராக உள்ளேன். மனைவி நித்யா மோகன் மற்றும் குழந்தை களுடன் இங்கு வசிக்கிறேன்.

நானும், மனைவியும் இணைந்து கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ‘ஆர்டர் கார்ப்பரேஷன்’ அறக்கட் டளையைத் தொடங்கினோம். தற்போதைய சூழலில், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கோவையில் உள்ள அரசு மருத் துவமனைகளுக்கு ஆக்சிஜன் தேவை என்பதை, மருத்துவராக உள்ள எனது அத்தை வாணி மோகன், கங்கா மருத்துவமனை யின் மயக்கவியல் துறை நிபுணர் மருத்துவர் பாலவெங்கட் ஆகி யோர் மூலம் அறிந்தோம். இதை யடுத்து எங்களது அறக்கட்டளை மூலம் நிதி திரட்டி, மருத்துவ மனைக்கு தேவையான ஆக்சிஜன் கட்டமைப்புகளை ஏற்படுத்தித் தர முடிவெடுத்தோம். அதன்படி, கடந்த வாரம் ஒருநாள் நிதி திரட்டும் பணியை தொடங்கினோம்.

அமெரிக்காவில் உள்ள எங் களது நண்பர்கள், தெரிந்தவர்கள் உள்ளிட்டோரிடம் செல்போன், இ-மெயில், வாட்ஸ்-அப், குறுந் தகவல், முகநூல் மூலமாக தொடர்பு கொண்டு நான், எனது மனைவி, முனைவர் ரவிகுமார், ரியா ராஜேஷ், ரித்திக் ராஜேஷ், சவுமியா குமார், பொறியாளர் விஜயகீர்த்தி ராமலிங்கம், மருத்துவர் பிரசாந்த் ராகவன் உள்ளிட்டோர் நிதி திரட்டினோம். அடுத்த 48 மணி நேரத்தில் ரூ.1 கோடி நிதி திரட்டப்பட்டது.

பின்னர், ஆக்சிஜன் கட்டமைப்பு களை ஏற்படுத்தும் தனியார் நிறு வனத்தை தொடர்பு கொண்டு, கோவை அரசு மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனைகளில் ஆக்சிஜன் கட்டமைப்புகளை ஏற் படுத்த ஆர்டர் செய்து தொகையை வழங்கினோம். கோவை அரசு மருத்துவமனையில் ரூ.51 லட்சம் மதிப்பில் நிமிடத்துக்கு 200 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தியாகும் கட் டமைப்பு, ரூ.5 லட்சம் மதிப்பில் 5 ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்கள், இஎஸ்ஐ மருத்துவமனையில் ரூ.27 லட்சம் மதிப்பில் நிமிடத்துக்கு 100 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தியாகும் கட்டமைப்பு, ரூ.3 லட்சம் மதிப்பில் படுக்கை வசதிகள் ஆகியவை ஏற்படுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறும்போது, ‘‘அமெரிக்க மருத்துவ தம்பதியரின் ‘ஆர்டர் கார்ப்பரேஷன்’ அறக்கட் டளை அமைப்பினர் ஏற்படுத்திக் கொடுத்த ஆக்சிஜன் கட்டமைப்பு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அதன்மூலம் 40 படுக்கைகளில் உள்ள கரோனா நோயாளிகள் பயன் பெறுகின்றனர்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

41 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

8 hours ago

மேலும்