மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கரோனா வார்டுகளில் அடிப்படை வசதிகள் இல்லை: நோயாளிகளும், உறவினர்களும் கடும் சிரமம்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கரோனா வார்டுகளில் அடிப்படை வசதிகள் இன்றி நோயாளிகளும், உடன் இருக் கும் உறவினர்களும் சிரமப் படுகின்றனர்.

மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கரோனா சிகிச்சை மருத்துவ மனையாக மாற்றப்பட்டுள்ளது. மதுரை அரசு மருத்துவமனை வார்டுகள், சித்தா மருத்துவமனை வார்டுகளில் நோயாளிகளுக்கான அடிப்படை வசதிகள் மிக மோசமாக இருக்கின்றன. கழிப்பிட அறை பராமரிப்பு இல்லாமல் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. நோயாளிகளுக்கு வழங்கப்படும் சாப்பாடும் தரமில் லாமல் உள்ளது. செவிலியர்கள், மருந்துகளை வழங்கிச் சென்று விடுகின்றனர். அதை நோயா ளிகளுக்கு அவர்களுடன் இருக்கும் உறவினர்கள்தான் கொடுக்கின்றனர். இதனால் சிகிச்சை பெறும் நோயாளிகளும், உறவினர்களும் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.

இது குறித்து நோயாளிகளின் உற வினர்கள் கூறியதாவது:

காலையில் ஒருமுறை கழிப் பறையை சுத்தம் செய்கிறார்கள். பின்னர் மறுநாள்தான் வருகி ன்றனர். அதனால் துர்நாற்றம் வீசுகிறது. பயன்படுத்தப்பட்ட முகக் கவசம், மருத்துவக் கழிவுகளை கொட்டுவதற்கு குப்பைத் தொட்டி இல்லை. அவசர உதவிக்கு மருத்துவர்கள், செவிலியர்களை அழைத்து வர வேண்டியுள்ளது. அவர்களுடைய நேரடி கண்காணிப்பு இல்லை. மூன்று வேளையும் சாப்பாடு கொடுக்கிறார்கள். ஆனால் தரமாக இல்லை. வெளியே வாங்கி வந்து கொடுக்க வேண்டியுள்ளது. டீ, மிளகு பால் கொடுப்பார்கள், அது ஒரு மாடிக்கு வருகிறது. சில மாடிகளுக்கு வருவதில்லை. சுடுதண்ணீர் அத்தியாவசியமானது. ஆனால் அதுகூட கொடுப்பதில்லை. மருத்துவமனைக்கு அருகே உள்ள கேண்டீன்களுக்கு போய் தான் சுடுதண்ணீர் வாங்கி வர வேண்டியுள்ளது.

அரசு மருத்துவமனை அருகே உள்ள கடைக்காரர்கள் இலவசமாக கொடுக்கிறார்கள். ஒவ்வொரு வார்டிலும் குறைந்தது இரண்டு சுடுதண்ணீர் வழங்கும் இயந்திரம் பொருத்தப்பட்டால் உதவியாக இருக்கும்.நோயாளிகளைக் கவனிப் பவர்களே வெளியில் உள்ள கடைகளுக்கும் சென்று வருவதால் தொற்று மேலும் பரவத் தான் செய்யும். அதுபோல் ஒருவர் இறந்தால் உடனடியாக உடல்களை அப்புறப்படுத்துவதில்லை. இறந்தவர்கள் பயன்படுத்திய ஆக்ஸிஜன் மாஸ்க் டியூப்பை சானிடைசர் போட்டு துடைத்துவிட்டு உடனே மற்ற நோயாளிகளுக்கு பயன்படுத்துகிறார்கள். இது போன்ற பிரச்சினைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண் டும் எனத் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

10 mins ago

இந்தியா

49 mins ago

சினிமா

3 hours ago

இந்தியா

58 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

4 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்