மாநகராட்சி ‘கார் ஆம்புலன்ஸ்’ சேவையால் இரு நாட்களில் 1,250 பேர் பயனடைந்தனர்: பொதுமக்கள் உபயோகப்படுத்த ஆணையர் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

சென்னையில் ஏராளமானோர் 108 ஆம்புலன்ஸ் சேவையைப் பயன்படுத்துவதால், ஆக்சிஜன் வசதி தேவைப்படும் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ்கள் கிடைப்பதில்லை.

இந்நிலையில், ஆக்சிஜன் வசதி தேவைப்படாத கரோனா நோயாளிகள் முதல்கட்ட பரிசோதனை மையத்துக்கு செல்லவும், அங்கிருந்து கரோனா சிகிச்சை மையங்களுக்கு செல்லவும் உதவும் வகையில், மாநகராட்சி சார்பில் ஆக்சிஜன் இல்லாத கார் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதில் தற்போது 225 கார்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றை கடந்த 15, 16-ம் தேதிகளில் மொத்தம் 1,251 பேர் பயன்படுத்தியுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

இந்த சேவையைப் பெற மாநகராட்சி மண்டல வாரியாக தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, திருவொற்றியூர் - 044 46556301, மணலி - 044 46556302, மாதவரம் - 044 46556303, தண்டையார்பேட்டை - 044 46556304, ராயபுரம் - 044 46556305, திரு.வி.க.நகர் - 044 46556306, அம்பத்தூர் - 044 46556307, அண்ணா நகர் - 044 46556308, தேனாம்பேட்டை - 044 46556309, கோடம்பாக்கம் - 044 46556310, வளசரவாக்கம் - 044 46556311, ஆலந்தூர் - 044 46556312, பெருங்குடி - 044 46556313, அடையாறு - 044 46556314, சோழிங்கநல்லூர் 044 46556315 ஆகிய எண்களில் கார் ஆம்புலன்ஸ் சேவையைப் பெறலாம் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

சினிமா

21 mins ago

வலைஞர் பக்கம்

1 hour ago

கல்வி

54 mins ago

இந்தியா

51 mins ago

தமிழகம்

57 mins ago

ஓடிடி களம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

12 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்