காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி டெல்டா விவசாயிகள் டெல்லியில் டிச.14-ல் மனித சங்கிலி: தலைவர்கள், எம்.பி.க்களிடம் ஆதரவு கேட்க முடிவு

By செய்திப்பிரிவு

காவிரி மேலாண்மை வாரியம், காவிரிநீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக் குழு அமைக்க வலியுறுத்தி டெல்லியில் இம்மாதம் 14-ம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள், எம்.பி.க்களைச் சந்தித்து ஆதரவு கேட்க உள்ளதாக காவிரி டெல்டா அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுவின் தலை வர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித் துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள அறிக்கை:

கர்நாடக அரசு தொடர்ந்து தண்ணீர் தர மறுத்துவருகிறது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரிநீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக் குழு அமைக்காமல் மத்திய அரசு காலம் கடத்தி வருகிறது.

இதை சாதகமாக பயன்படுத் திக்கொண்ட கர்நாடகம், உபரிநீரை யும் தடுத்து ராசிமணல், மேகேதாட்டு அணை கட்டுமானப் பணியை தொடங்குவதற்கான டெண்டர் பணிகளை முடித்துள்ளது. இதை வன்மையாக கண்டிப்பதுடன், இனியாவது மத்திய அரசு மவுனத் தைக் கலைத்துவிட்டு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம், காவிரிநீர் பங்கீட்டு ஒழுங்காற்று குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும்.

தமிழகத்தின் 25 மாவட்டங்களில் 5 கோடி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், கர்sநாடகம் காவிரி யில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்தவும், தொடர் போராட்டங் களை நடத்தி வருகிறோம்.

இந்நிலையில் டிசம்பர் 14-ம் தேதி காலை டெல்லியில் நாடாளுமன்றம் முன் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளோம். இதில் பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கான விவசாயிகள் ரயில் மூலம் டெல்லி செல்வதற்கு முன்பதிவு செய்துள்ளனர்.

இப்போராட்டத்துக்கு ஆதர வளிப்பதுடன், பங்கேற்கக் கோரி தமிழகத்தைச் சார்ந்த அனைத்து எம்.பி.க்கள், அரசியல் கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள் ளோம். தொடர்ந்து, டெல்லியில் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நேரில் சந் தித்து அழைப்பு விடுக்க உள்ளோம்.

இப்போராட்டத்தில் டெல்லியில் வாழும் ஆயிரக்கணக்கான தமிழர் களும் பங்கேற்க உள்ளனர். இப் போராட்டம் மூலம் மத்திய அரசின் கவனத்தை ஈர்த்து தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்படும் என நம்புகிறோம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

13 mins ago

இந்தியா

47 mins ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

மேலும்