கோவிட் நிமோனியாவுடன் இருப்பதே தீவிர நிலையாகும்: மியாட் மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்

By செய்திப்பிரிவு

கோவிட்-19 நோயாளிகள் குறித்து மியாட் மருத்துவர்கள் எழுதியுள்ள கட்டுரை புகழ்பெற்ற மருத்துவ இதழான ‘குளோபல் எபிடெமியாலஜி அண்ட் குளோபல் ஹெல்த்’ பத்திரிகையில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் உள்ள விவரம் நம்மக்கள் கரோனா இரண்டாவது அலையை எதிர்கொள்ளவும், சரியான நேரத்தில் மருத்துவ உதவியைப் பெறுவதற்கும் உதவும் என்ற நம்பிக்கையில் இக்கட்டுரையில் உள்ள தகவல் பகிரப்பட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ளதாவது:

கோவிட்-19 முதல் அலையும், 2-வது அலையும் வேறுபட்டவை அல்ல; இயற்கையில் இரண்டும் ஒன்றே ஆகும். கடந்த ஆண்டில் ஸ்வாப் பரிசோதனை செய்யவே பலர்தயக்கம் காட்டினர். ஆனால், தற்போது இது மாறிவிட்டது. கோவிட்-19 பாதிப்பை யாரும் ஒரு களங்கமாகக் கருதவில்லை. எனவே, பொதுமக்கள் ஸ்வாப் பரிசோதனை செய்துகொள்கின்றனர்.

பரிசோதனையில் பாஸிட்டிவ் முடிவைப் பெற்றவர்கள் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் உதவியுடன் நிலையை கண்காணித்து சமாளிக்கலாம் என்றுகருதுகின்றனர். இறுதிக் கட்டத்திலேயே அவர்கள் சிடி அல்லது ரத்தப்பரிசோதனையை செய்துகொள்கின்றனர். இப்பரிசோதனைகளில் நிமோனியா தெரியவரும்போது, நோயாளி உடனடியாக சரியானதொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்.

கோவிட் பாஸிட்டிவ் என்பது தீவிரமான நிலை அல்ல. ஆனால், கோவிட்-19 உடன் கடுமையான நிமோனியா இருந்தால், இறப்பு விகிதம் அதிகமாகவும், நோயிலிருந்து விடுபடநீண்ட காலம் ஆகவும் வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு வயதானவர்கள் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டனர். ஆனால், தற்போது அவர்களில் பெரும்பாலோர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார்கள். 40 முதல் 50 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் கடந்த ஆண்டைப்போல் இவ்வாண்டும் உயர் ஆபத்தில் உள்ளனர்.

2021 இரண்டாவது அலையில் உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால், தடுப்பூசிக்குப் பிறகும்ஒருவருக்கு பாஸிட்டிவ் நிலை ஏற்பட்டால், அவர் கோவிட் நிமோனியாவால் அவதிப்படுவதில்லை. இதுதடுப்பூசி போடப்படுவதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.

இவ்வாறு ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாக மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது. 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

வணிகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தொழில்நுட்பம்

6 hours ago

சினிமா

7 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

8 hours ago

க்ரைம்

8 hours ago

மேலும்