காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது ஜல்லிக்கட்டு தடையை நீக்க திமுக முயற்சி செய்யவில்லை: மதிமுக உயர்நிலைக் குழு குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு முந்தைய காங்கிரஸ் அரசு தடை விதித்தபோது, அந்தக் கூட்டணி யில் இருந்த திமுக ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை நீக்க முயற்சிக்கவில்லை என்று மதிமுக உயர்நிலைக் குழு குற்றம்சாட்டியுள்ளது.

மதிமுக மாவட்டச் செயலாளர் கள், உயர்நிலைக் குழு, ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் குழு ஆகியவற்றின் ஆலோசனைக் கூட்டம் சென்னை தாயகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் வைகோ உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

செம்பரம்பாக்கம் ஏரியை முறையாக திறந்து விடாததால் தான் கனமழை நேரத்தில் அடை யாறு ஆற்றில் கடும் வெள்ளம் ஏற்பட்டது. இது தொடர்பாக பதவியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரனை நடத்த வேண்டும். தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி முறையாக சென்றடைய அனைத்துக் கட்சி குழுவை அமைக்க வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டிக்கு காங் கிரஸ் கூட்டணி அரசு தடை விதித்துபோது, அந்தக் கூட்டணி யில்தான் திமுக இருந்தது. அப்போது, ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க அக்கட்சி முயற்சி மேற்கொள்ளவில்லை.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்துக்கு எதிராக வழங்கப் பட்டுள்ள தீர்ப்பு, மனிதர் களிடையே வேறுபாட்டை ஏற் படுத்துவதாக உள்ளது. ஜேஇஇ தேர்வை தமிழிலும் நடத்த வேண்டும். மழை வெள்ள பாதிப்பால் மதிமுக 5-வது அமைப்புத் தேர்தல், சட்டப் பேரவை தேர்தலுக்கு பிறகு தள்ளிவைக்கப்படுகிறது என்பன உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தொழில்நுட்பம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

கல்வி

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்