அரசு உத்தரவை மீறி மழை விடுமுறையில் தனியார் பள்ளிகள் இயங்கினால் கடும் நடவடிக்கை: மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

அரசு உத்தரவை மீறி தனியார் பள்ளிகள் மழை விடுமுறை நாட் களில் இயங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்கு நர் ஆர்.பிச்சை எச்சரிக்கை விடுத் துள்ளார்.

கனமழை மற்றும் வானிலை முன்னெச்சரிக்கையை கருத்தில் கொண்டு பள்ளிகள் மற்றும் கல் லூரிகளுக்கு விடுமுறை விடப்படு வது வழக்கம். அந்த வகையில், தமிழகத்தில் கனமழையின் கார ணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விடுமுறை விடப் பட்டு வருகிறது. கனமழையில் மாணவ-மாணவிகள் பாதிக்கப்படா மல் இருப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது.

அரசின் விடுமுறை உத்தரவை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் நடைமுறைப்படுத்தி விடுகின்றன. ஆனால், ஒருசில தனியார் பள்ளிகள் அரசு உத்த ரவை மீறி, மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவதும், ஆசிரியர்களை பணிக்கு வரச்சொல் வதும் அங்கொன்றும் இங்கொன்று மாக நிகழாமல் இல்லை. கனமழை யின் காரணமாக, இந்த மாதம் தொடங்கவிருந்த அரையாண்டுத் தேர்வுகள் ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்து விட்டார். அதோடு இந்த உத்தரவு தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி களுக்கு கனமழை காரணமாக செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சென்னை மற்றும் புறநகர் பகுதி களில் ஒருசில தனியார் பள்ளி கள் அந்த விடுமுறை நாட்களில் வகுப்பு வைத்ததுடன் மட்டுமின்றி சில பள்ளிகளில் மாதிரி அரை யாண்டுத்தேர்வுகளும் நடத்தப்பட்ட தாக பெற்றோர் சிலர் புகார் தெரி வித்தனர்.

இதுகுறித்து மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை யிடம் கேட்டபோது அவர் கூறிய தாவது:-

கனமழையை கருத்தில் கொண்டு அரசு விடுமுறை அறிவிக் கும் பட்சத்தில் அது அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்தும். அரசின் உத்தரவை நடைமுறைப் படுத்தும் வகையில் அனைத்துப் பள்ளிகளும் விடுமுறை விட வேண்டும். அரசின் உத்தரவை மதிக்காமல் விடுமுறை தினங்களில் தனியார் பள்ளிகள் இயங்கினால் அது விதிமுறையை மீறிய செயல் ஆகும்.

அரசு விடுமுறை அறிவிக்கப் படும்போது தனியார் பள்ளிகளும் விடுமுறை விடுவதை உறுதி செய்யுமாறு அனைத்து மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர்களுக்கும் (ஐ.எம்.எஸ்.) ஏற்கனவே அறி வுரை வழங்கப்பட்டுள்ளது. அரசு உத்தரவை மீறி தனியார் பள்ளிகள் இயங்குவது குறித்து தெரிய வந்தால் அந்த பள்ளிகளிடம் விளக்கம் கேட்டு அடுத்த கட்டமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு பிச்சை கூறினார்.

அரசின் உத்தரவை மதிக்காமல் விடுமுறை தினங்களில் தனியார் பள்ளிகள் இயங்கினால் அது விதிமுறையை மீறிய செயல் ஆகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்