கரோனா தடுப்புப் பணியை மக்கள் இயக்கமாக மாற்ற திராவிடர் கழகம் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

கரோனா தடுப்புப் பணிகளை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டிய அவசர, அவசியமானது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

முதல்வராக பொறுப்பேற்பதற்கு முன்பே மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் கரோனா தடுப்புப் பணிகளை அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி மேற்கொள்ளத் தொடங்கிவிட்டார். இன்றைய சூழலில், கரோனா பரவலைத் தடுத்து நிறுத்துவது சாதாரண பணி அல்ல. அது மிகப் பெரிய சவால். எனவே, மனம் தளராமல் மக்களுக்கு அச்சத்தைப் போக்கி இதை ஒரு மக்கள் இயக்கமாக்குவது மிகவும் அவசர அவசியமாகும்.

தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைக்க மாநில அரசின் இயந்திரம் மிக வேகமாக முடுக்கிவிடப்பட வேண்டும். கூட்டம் கூடுதல், தனி நபர் இடைவெளியை கைவிடுதல் போன்றவற்றைத் தவிர்த்து சமூக சிந்தனையோடும் பொறுப்புணர்வோடும் ஒவ்வொருவரும் செயல்பட்டு, முதல்வருக்கும் ஆட்சிக்கும், அதிகாரிகளுக்கும் ஒத்துழைப்பை நல்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஆன்மிகம்

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்