ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதில் எதிர்பார்த்த முடிவு இல்லையெனில் திமுக களத்தில் இறங்கி போராடும்: கனிமொழி எம்.பி. உறுதி

By செய்திப்பிரிவு

ஜல்லிக்கட்டு நடத்துவதில் எதிர் பார்த்த முடிவு கிடைக்காவிட்டால் திமுக களத்தில் இறங்கி போராடும் என்று அக்கட்சியின் எம்பி கனிமொழி கூறியுள்ளார்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு திமுக மகளிரணி சார்பில் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, சென்னை ஆர்.கே.நகரில் நேற்று நடந்தது. திமுக மகளிரணிச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி கலந்துகொண்டு நிவா ரண உதவிகளை வழங்கினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் முறையாக சென்றடையவில்லை என்று கூறப்படுகிறது. வெள்ள நிவாரணத்துக்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதி முறையாக பயன்படுத்தப்பட்டதா என்பதும் தெரியவில்லை. எனவே, அது தொடர்பான விவரங்களை மாநில அரசு வெளியிட வேண்டும்.

ஜல்லிக்கட்டு போட்டி தொடர் பாக மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் அளித்த உத்தரவாதத் தின் அடிப்படையில்தான் திமுக போராட்டம் தள்ளிவைக்கப்பட்டது. எதிர்பார்த்த முடிவு கிடைக்க வில்லை என்றால் திமுக களத்தில் இறங்கி போராடும். ஜல்லிக்கட்டு நடத்துவதில் விதிகளை பின்பற்றாத தால்தான் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதற்கு மாநில அரசே பொறுப்பாகும்.

மக்களின் அடிப்படை பிரச்சி னைகளை ஆராய்ந்து அவற்றை பிரதிபலிக்கும் வகையில் திமுக தேர்தல் அறிக்கை இருக்கும். தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகள் 75 சதவீதம் முடிவடைந் துள்ளன என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

உலகம்

21 mins ago

தமிழகம்

26 mins ago

உலகம்

31 mins ago

வாழ்வியல்

6 mins ago

விளையாட்டு

34 mins ago

சுற்றுச்சூழல்

38 mins ago

சினிமா

46 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்