பவுன் விலை குறைந்தது: மேலும் குறைய வாய்ப்பு

By செய்திப்பிரிவு

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.216 குறைந்து, ஒரு பவுன் நேற்று ரூ.18,896-க்கு விற்கப்பட்டது. இம்மாத இறுதி வரை தங்கம் விலை இறங்குமுகமாகவே இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

சர்வதேச விலைக்கு ஏற்ப அவ்வப் போது ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த 13-ம் தேதி ஒரு பவுன் விலை ரூ.19,392. இது படிப் படியாக இறங்கி, நேற்று ரூ.18,896 என்ற அளவுக்கு குறைந்தது. கடந்த 7 நாட்களில் பவுன் விலை ரூ.496 குறைந்துள்ளது.

சென்னையில் நேற்று முன்தினம் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.2,389-க்கும் ஒரு பவுன் ரூ.19,112-க்கும் விற்றது. நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.27 என பவுனுக்கு ரூ.216 குறைந்தது. இதனால், ஒரு கிராம் ரூ.2,362-க்கும், ஒரு பவுன் ரூ.18,896-க்கும் விற்கப்பட்டது. இந்த ஆண்டில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில்தான் குறைந்த விலையில், அதாவது ஒரு கிராம் தங்கம் ரூ.2,343-க்கு விற்கப்பட்டது. தற் போது 2-வது முறையாக ஒரு கிராம் ரூ.2,362-க்கு விற்கப்படுவது குறிப் பிடத்தக்கது.

சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச் செய லாளர் எஸ்.சாந்தகுமார், ‘தி இந்து’ விடம் கூறியபோது, ‘‘ஆண்டு கடைசி என்பதால், தங்கத்தில் முதலீடு செய் வது குறைந்துள்ளது. இதனால், விலை குறைந்து வருகிறது. தங்கம் விலை கணிசமாக குறைந்திருப்ப தால், கடந்த சில நாட்களாக வாடிக் கையாளர்கள் வருகை வழக்கத்தை விட அதிகம் இருக்கிறது. வரும் வாரங்களில் தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்பு இருக்கிறது. இம்மாத இறுதிவரை தங்கம் விலை இறங்குமுகமாகவே இருக்கும் என்று தெரிகிறது. ஜனவரி முதல் வாரத்தில் இருந்து தங்கம் விலை மீண்டும் உயரக்கூடும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

3 hours ago

மேலும்