கூடங்குளத்தில் அடுத்த மாதம் மின் உற்பத்தி

By செய்திப்பிரிவு

கூடங்குளம் முதல் அணு உலையில் அடுத்த மாதம் மின் உற்பத்தி தொடங்கும் என்று அணுசக்திக் கழக தலைவர் சேகர் பாசு தெரிவித்துள்ளார்.

இந்திய அணுசக்திக் கழக தலைவர் சேகர் பாசு மும்பையில் இருந்து நேற்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

கூடங்குளம் முதலாவது அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்னுற்பத்தி வரும் ஜனவரி மாதம் தொடங்கும். 2-வது அணு உலையில் சோதனை ஓட்டம் உள்ளிட்ட பணிகள் வரும் ஏப்ரல் மாதத்தோடு நிறைவடைவதால், அந்த உலையில் மே மாதத்தில் உற்பத்தி தொடங்கப்படும்.

3 மற்றும் 4-வது அணு உலைகள் அமைக்கும் பணி 8 ஆண்டுகளுக் குள் நிறைவடையும். கூடங்குளத் தில் மொத்தம் 6 ஆயிரம் மெகா வாட் மின்னுற்பத்தி செய்யப்படும். இதில், தமிழ்நாட்டுக்கு 3 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் வழங்கப்படும். கூடங்குளம் அணு உலைக்குத் தேவையான மூலப் பொருட்கள் கஜகஸ்தான் நாட்டில் இருந்து வரவழைக்கப்படுகிறது. இந்நிலை யில், பிரதமர் நரேந்திர மோடி செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, கனடா நாட்டில் இருந்தும் அவை வாங்கப்படும்.

இவ்வாறு சேகர் பாசு கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

இந்தியா

3 hours ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

2 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்