புதுச்சேரியில் 60 ஆயிரத்தைக் கடந்த கரோனா; புதிய உச்சமாக ஒரே நாளில் 1,379 பேர் பாதிப்பு

By அ.முன்னடியான்

புதுச்சேரியில் இன்று புதிய உச்சமாக ஒரே நாளில் 1,379 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலாளர் அருண் இன்று (மே. 01) வெளியிட்டுள்ள தகவல்:

"புதுச்சேரி மாநிலத்தில் 6,531 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரி - 1,100, காரைக்கால் - 113, ஏனாம் - 121, மாஹே - 45 பேர் என, மொத்தம் 1,379 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரியில் 11 பேர், ஏனாமில் ஒருவர் என மொத்தம் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 817 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.36 சதவீதமாக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 60,001 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, ஜிப்மரில் 294 பேரும், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 307 பேரும், கோவிட் கேர் சென்டரில் 855 பேரும் என, புதுச்சேரியில் 1,456 பேரும், காரைக்காலில் 68 பேரும், ஏனாமில் 223 பேரும், மாஹேவில் 26 பேரும் என மருத்துவமனைகளில் 1,773 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் புதுச்சேரியில் 6,838 பேரும், காரைக்காலில் 923 பேரும், ஏனாமில் 414 பேரும், மாஹேவில் 315 பேரும் என 8,490 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலம் முழுவதும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 263 ஆக உள்ளது.

இன்று 623 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 48 ஆயிரத்து 921 (81.53 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை 8 லட்சத்து 3 ஆயிரத்து 173 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 7 லட்சத்து 95 ஆயிரத்து 897 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது.

மேலும், சுகாதார பணியாளர்கள் 32 ஆயிரத்து 247 பேர், முன்களப் பணியாளர்கள் 18 ஆயிரத்து 882 பேர், பொதுமக்கள் 1 லட்சத்து 48 ஆயிரத்து 352 பேர் என, மொத்தம் 1 லட்சத்து 99 ஆயிரத்து 481 பேருக்கு (2-வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

சுற்றுச்சூழல்

32 mins ago

வணிகம்

22 mins ago

இந்தியா

32 mins ago

க்ரைம்

5 mins ago

சுற்றுலா

5 hours ago

தமிழகம்

43 mins ago

இந்தியா

50 mins ago

வணிகம்

53 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்