மிலாடி நபி: டிச.24-ல் டாஸ்மாக் கடைகளை மூட அரசு உத்தரவு

By செய்திப்பிரிவு

மிலாடி நபியை முன்னிட்டு வரும் 24-ம் தேதி டாஸ்மாக் கடைகள், பார்களை மூட வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

நபிகள் நாயகம் பிறந்த தினமான மிலாடி நபிக்கு 23-ம் தேதி அரசு விடுமுறை என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், அரசு தலைமை ஹாஜி மிலாடி நபி 24-ம் தேதி கொண்டாடப்படுவதாக அறிவித்தார். அறிவிப்பை தொடர்ந்து, தமிழக பொதுத்துறை, செலாவணி முறிச்சட்ட அடிப்படையில், மிலாடி நபிக்கான அரசு விடுமுறை 24-ம் தேதியாக மாற்றி அறிவித்தது.

இதையடுத்து, 24-ம் தேதி தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக்கடைகள் மூடப்படுகிறது. இது தொடர்பாக அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

சென்னையில் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி ,‘‘ நபிகள் நாயகம் பிறந்த தினத்தை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள், அதை சார்ந்த பார்கள், கிளப் பார்கள், ஓட்டல் பார்கள், உரிமம் பெற்ற பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும். மதுபானம் விற்க கூடாது. தவறினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என அறிவித்துள்ளார்.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

சினிமா

16 mins ago

சுற்றுச்சூழல்

10 mins ago

தமிழகம்

30 mins ago

ஆன்மிகம்

38 mins ago

தமிழகம்

52 mins ago

விளையாட்டு

45 mins ago

தமிழகம்

56 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

உலகம்

1 hour ago

மேலும்