சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளைக்கு மே 1 முதல் 31-ம் தேதி வரை கோடை விடுமுறை

By செய்திப்பிரிவு

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கு மே 1 முதல் 31-ம்தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர வழக்குகளை விசாரிக்க 8 நாட்கள் விடுமுறை கால நீதிமன்றம் இயங்கும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சுரேஷ்குமார், ஆதிகேசவலு, சுவாமிநாதன், மஞ்சுளா ஆகியோர் முதல் வாரம் அவசர வழக்குகளை விசாரிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகள் கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி, சந்திரசேகரன், கண்ணம்மாள் ஆகியோர் 2-வது வாரமும்,நீதிபதிகள் அனிதா சுமந்த், செந்தில்குமார் ராமமூர்த்தி, நிர்மல்குமார், வி.சிவஞானம் ஆகியோர் 3-வது வாரமும், நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சரவணன், சத்திகுமார் சுகுமாரகுரூப், தமிழ்செல்வி ஆகியோர் 4-வது வாரமும் அவசர வழக்குகளை விசாரிப்பர்.

இதேபோல், மதுரை கிளையில் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், புகழேந்தி, ஆனந்தி ஆகியோர் முதல் வாரமும், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், கிருஷ்ணவள்ளி, நக்கீரன்ஆகியோர் 2-வது வாரமும், நீதிபதிகள் கிருஷ்ணகுமார், ஆனந்த் வெங்கடேஷ், இளங்கோவன் ஆகியோர் 3-வது வாரமும், நீதிபதிகள் வேலுமணி, தாரணி, முரளி சங்கர் ஆகியோர்4-வது வாரமும் அவசர வழக்குகளைவிசாரிப்பார்கள் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தனபால் அறிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

8 hours ago

மேலும்