தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஜனவரி இறுதியில் ஆலோசனை: ராஜேஷ் லக்கானி தகவல்

By செய்திப்பிரிவு

தேர்தல் ஆணையர்கள் சென்னை வருகின்றனர்

*

சட்டப்பேரவை பொதுத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த, தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி உள்ளிட்ட 3 ஆணையர்களும் ஜனவரி இறுதியில் தமிழகம் வருகின்றனர்.

இதுதொடர்பாக, தமிழக தலை மைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று கூறியதாவது:

வெள்ளம் காரணமாக வாக் காளர் அடையாள அட்டையை இழந்தவர்கள், மாற்று அட்டை கோரி வருகின்றனர். சென்னையில் ‘1950’ என்ற தொலைபேசி எண் மூலம் 3 ஆயிரம் பேரும், நேரடியாக 6,500 பேரும் என மொத்தம் 9,500 பேர் விண்ணப்பித்துள்ளனர். காஞ்சிபுரத்தில் 3,224 பேர், திருவள்ளூரில் 300 பேர், கடலூரில் 1,934 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

அரசு சார்பில் மனுக்கள் பெறும் முகாம் வரும் 28-ம் தேதி வரை நடக்கிறது.விண்ணப்பித்தவர் களுக்கு ஜனவரி 1-ம் தேதி முதல் வீடு வீடாக சென்று வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்காக பிஹார், குஜராத், மகாராஷ்டிர மாநிலங்களில் இருந்து 75 ஆயிரம் கட்டுப்பாட்டு இயந்திரங் கள், தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந் திரங்களை தமிழகத்துக்கு கொண்டுவர தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அவை விரைவில் கொண்டு வரப்படும்.

தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி உள்ளிட்ட 3 ஆணையர் களும் சமீபத்தில் மேற்கு வங்கத் துக்கு சென்று அம்மாநில சட்டப் பேரவை பொதுத்தேர்தல் முன்னேற் பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினர். இன்று (நேற்று) அசாம் சென்றுள்ளனர். அடுத்தகட்டமாக தமிழகம், கேரளம், புதுச்சேரிக்கு வர உள்ளனர். ஜனவரி இறுதியில் தமிழகம் வருவார்கள் என எதிர்பார்க் கப்படுகிறது. தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 20-ம் தேதி வெளியிடப்படுகிறது. அதன்பிறகு அவர்கள் தமிழகம் வர வாய்ப்புள்ளது. இவ்வாறு ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

தொழில்நுட்பம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

கல்வி

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்